Published : 25 Mar 2019 06:55 AM
Last Updated : 25 Mar 2019 06:55 AM
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு இத்தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இதனால்அதிருப்தி அடைந்த அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் அதிமுக கூட்டணிக்கு விழும் யாதவர் சமுதாய வாக்குகள் பிரியக்கூடும் என்றபேச்சு எழுந்தது. இதை தடுக்க ராஜ கண்ணப்பனுக்கு எதிராக தென் மாவட்டங்களில் பிரச்சாரத்துக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை ஈடுபடுத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இவர் மூலம் யாதவர் அமைப்பு நிர்வாகிகளிடம் அதிமுக தலைமைபேசி வருகிறது. ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யுமாறு அவர்களையும் கேட்டுள்ளது. அதற்கான செலவுகளை கட்சி கவனித்துக் கொள்ளும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியபோது, யாதவர்களின் ஏகோபித்த தலைவராக ராஜ கண்ணப்பன் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் தமிழ் தேசம் கட்சியைத் தொடங்கிவிட்டு பாதியில் விட்டுச் சென்றதால் யாதவர்கள் அவர் மீது கோபத்தில்தான் இருக்கின்றனர்.
அவரது பிரச்சார வியூகத்தை முறியடிக்கவே கோகுல இந்திரா களமிறக்கப்படுகிறார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT