Published : 19 Mar 2019 11:18 AM
Last Updated : 19 Mar 2019 11:18 AM
தேசிய கட்சியான பாஜக தென்மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுவது பிற மாவட்ட பாஜகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை, ராமநாதபுரம், சிவ கங்கை, தூத்துக்குடி, கன்னியா குமரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய மக்களவைத் தேர்தல்களில் திருச்சி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய தொகுதி களில் அதிமுக, திமுக கூட்டணியில் பாஜக இருமுறை வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் வட சென்னை தொகுதியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் போட்டியிட்டுள்ளார்.
இதை அடிப்படையாக வைத்து ஏற்கெ னவே வெற்றி பெற்ற தொகுதி களை பாஜக கேட்டுள்ளது. மேலும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்காக வட சென்னையையும், முன் னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை தொகுதியையும் கேட்டுள்ளனர். மனோஜ்பாண்டியனுக்காக நெல்லையை கொடுக்க அதிமுக மறுத்துவிட்டது. அதற்குப் பதில் ராமநாதபுரம் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டது. தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவதால் இத்தொகுதியை கேட்காமலே பாஜவுக்கு அதிமுக தள்ளி விட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக தொகுதி கேட்ட பாஜவுக்கு தென் மாவட்டங்களில் 4 தொகுதி களையும், மேற்கு மண்டலத் தில் கோவையும் ஒதுக்கப்பட் டுள்ளது. அதே நேரத்தில் வடக்கு மண்டலத்தில் மட்டும் குறிப்பிட்ட சதவீத ஓட்டு வங்கி வைத்திருக்கும் பாமகவுக்கு தென் மண்டலத்தில் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்சியான பாஜவுக்கு தலைநகர் சென்னையிலும், வடக்கு மண்டலத்திலும் போட்டி யிட வாய்ப்பு இல்லாமல் தென் மாவட்டங்களில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், வட மாவட்டங்களில் பாஜக கேட்ட தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டாலும் ஏற்கலாம். ஆனால் பாஜக கேட்ட வட சென்னை, திருச்சி தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கியு ள்ளனர். சென்னையில் ஒரு தொகுதியை பாஜக தலைவர்கள் வலியுறுத்தி பெற்றிருக்க வேண்டும். அதை செய்ய பாஜக தலைவர்கள் தவறிவிட்டனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT