Published : 29 Mar 2019 08:33 AM
Last Updated : 29 Mar 2019 08:33 AM

விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அமமுக, அதிருப்தி வேட்பாளர்களால் அதிமுகவுக்கு தலைவலி: பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினால் போட்டியில் முந்த திமுகவுக்கு வாய்ப்பு

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு போட்டியாக, அதிருப்தி வேட்பாளரும், அமமுக வேட்பாளரும் களத்தில் நிற்பதால், இன்னும் சற்று உழைத்தால் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாகும்.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து 12 முறை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதி, 8 முறை அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதி, தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது. அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக களம் காண்கிறார். இதேபோன்ற அனுபவத்தை, இத்தொகுதி கடந்த 1984-ம் ஆண்டும் சந்தித்தது.

திமுகவுக்கு தாரைவார்ப்புகடந்த 1984-ம் ஆண்டு விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் சீட் பெற, எம்.தெய்வேந்திரன், ஆர்.கே.பெருமாள் ஆகியோர் முயற்சி எடுத்தனர். இதில் ஆர்.கே.பெருமாளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிருப்தியடைந்த எம்.தெய்வேந்திரன், சுயேச்சையாக `ஏணி’ சின்னத்தில் களம் கண்டார். இதில், 21 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் பெரும்பாலான வாக்குகளை அவர் பிரித்ததால், திமுக சார்பில் போட்டியிட்ட குமரகுருபர ராமநாதன் 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மீண்டும் அதே நிலைமைதற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவில் போட்டியிட தொடக்கம் முதலே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜி.வி.மார்க்கண்டேயன், பி.சின்னப்பன் ஆகியோர் முயற்சி எடுத்து வந்தனர். இதில் பி.சின்னப்பனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பி.சின்னப்பன் மின்னல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு இரட்டை இலை சின்னம் பலம். கிராமப்புறங்களில் இரட்டை இலைக்கு உள்ள வாக்கு பலத்தை அறுவடை செய்துவிடலாம் என்று கட்சியினர் நம்புகின்றனர்.

சீட் கிடைக்காததால் அதிருப்தியடைந்த ஜி.வி.மார்க்கண் டேயன், உடனடியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசி, சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்து விட்டு, கிராமம் கிராமமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இவரும், அமமுக வேட்பாளர் கோ.ஜோதிமணியும் அதிமுகவுக்கான வாக்குகளைப் பிரித்தால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பிரியும் வாக்குகள்கடந்த 1984-ல் அதிமுகவைச் சேர்ந்த இருவர் களம் கண்டதால், திமுக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால், தற்போது அதிமுக சார்பில் ஒருவர், அதிமுகவில் இருந்து பிரிந்த இருவர் என 3 பேர் வாக்குகளைப் பகிர்கின்றனர்.

கிராமப்புறங்களில் இரட்டை இலை சின்னத்துக்கு தான் வாக்கு. அதிலிருந்து பிரிந்து சென்றவர் களைப் பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள் என்பதையும் மறுப்பத ற்கு இல்லை. எனினும், திமுக கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற நிலைமை இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x