Last Updated : 12 Mar, 2019 11:29 AM

 

Published : 12 Mar 2019 11:29 AM
Last Updated : 12 Mar 2019 11:29 AM

ராமநாதபுரத்துக்கு மல்லுக்கட்டும் அன்வர்ராஜா, ராஜ.கண்ணப்பன்: எதிரும், புதிருமாக இருந்த அமைச்சரும், எம்பியும் ராசியாகிவிட்டனர்

ராமநாதபுரத்தில் போட்டியிட அதிமுகவில் அன்வர்ராஜா, ராஜ.கண்ணப்பன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் எதிரும், புதிருமாக இருந்த அமைச்சரும், எம்.பி.யும் ராசியாகி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் அமைச்சர் எம்.மணிகண்டனும், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமியும் எதி ரும், புதிருமாக உள்ளனர். அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர் கலந்து கொள்வதில்லை. ஏன் என்றால் மாவட்டச் செயலாளருக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்கின்றனர். மாவட்டச் செயலாளரை, அமைச்சர் எதிலும் தலையிட விடுவதில்லை என்ற குற்றச்சாட்டை மாவட்டச் செயலாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் அமைச்சருக்கும், அ.அன்வர்ராஜா எம்பிக்கும் ஒத்துப் போவதில்லை. அமைச்சர் பங்கேற்கும், அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் எம்பி கலந்து கொள்வதில்லை. காரணம் எம்பி.க்கு விழா நடத்தும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவிப்பதில்லை. அமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளின் அழைப்பிதழில்கூட எம்பி பெயரைப் போடுவதில்லை என எம்பி தரப்பினர் கூறி வந்தனர். அதனால் அமைச்சரை எதிர்க்க மாவட்டச் செயலாளர், எம்பி இருவரும் கைகோர்த்தனர். இதன் வெளிப்பாடாக கடந்தாண்டு மாவட்டச் செயலாளர், எம்பி தரப்பினர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று முதல்வர், துணை முதல்வரிடம் புகார் மனு அளித்தனர். புகார் மனு அளித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சரே ராமநாதபுரத்தில் நடந்த கூட்டுறவு தேர்தல் ஆலோசனைக் கூட் டத்தில் தெரிவித்தார்.

அதனால் ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் அமைச்சர் அணியினர், மாவட்டச் செயலாளர், எம்பி அணியினர் என்ற கோஷ்டி பூசல் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த கோஷ்டி பூசல் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது சீட் பெற மக்களவை உறுப்பினராக உள்ள அ.அன்வர்ராஜா முனைப்புடன் உள் ளார். அதேபோல் கட்சியில் சிலர் முன் னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பனை நிறுத்தச் சொல்கின்றனர். அன்வர்ராஜா, கண்ணப்பன், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, இவரது மனைவியும் மாநில மகளிர் அணி இணைச் செய லாளருமான கீர்த்திகா முனியசாமி உட்பட பலர் கட்சியில் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில் அ.அன்வர்ராஜா, கண்ணப்பன் பெயர்களே முன்னிலையில் உள்ளன.

அமைச்சர் மணிகண்டனின் அதி காரத்தைக் குறைக்க வேண்டும் என் றால் அன்வர்ராஜாவைவிட, ராஜ.கண் ணப்பன்தான் சரியான வேட்பாளர் என நினைத்து ராஜ.கண்ணப்பனை மாவட்டச் செயலாளர் பரிந்துரைக்கிறார். இதற்காகத் தானும், தன் மனைவியும் சீட் பெறுவதில் இருந்து விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தன் பக்கம் இருந்த மாவட்டச் செயலாளர் முனியசாமி, கண்ணப்பன் பக்கம் தாவியுள்ளாரே என நினைத்த எம்பி, சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழலாம் என நினைத்து, அமைச்சரிடம் சரண்டராகியுள்ளார்.

இதன் வெளிப்பாடாக எதிரும், புதிருமாக இருந்த அமைச்சரும், எம்பியும் சில நாட்களாக ராசியாகி உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் தொடக்க விழாவில், இதுவரை எம்பியை பற்றி எந்த கூட்டத்திலும் பேசாத அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பேட்டரிக் கார் வாங்கிக் கொடுத்துள்ளார் எனப் புகழ்ந்தார்.

அதற்கு முன்பு பேட்டரி கார் தொடக்க விழாவில் பேசிய எம்பி., அமைச்சர் மணிகண்டன் மருத்துவர் என்பதால் ராம நாதபுரம் மருத்துவமனைக்குப் பல்வேறு சிறப்பு வசதிகளைப் பெற்றுத் தந்துள்ளார் எனப் புகழ்ந்தார். பேசிக் கொள்ளாமலும், நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்ளாமலும் இருந்த அமைச்சரும், எம்பியும் ராசியாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அமைச் சர் மணிகண்டனை, அன்வர்ராஜா எம்பி நேற்று முன்தினம் சந்தித்து சால்வை அணிவித்தார். அன்வர்ராஜா எம்பி சீட் பெற அமைச்சரை சந்தித்துள்ளார் எனக் கட்சியினர் பேசிக் கொள்கின்றனர். ஒரு வழியாக மக்களவைத் தேர்தலால் எலியும், பூனையுமாக இருந்த அமைச்சரும், எம்பியும் ராசியாகியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x