Published : 08 Mar 2019 07:20 AM
Last Updated : 08 Mar 2019 07:20 AM
வேட்பு மனுவுடன் அளிக்கப்படும் பிரமாண பத்திரத்தில் 5 ஆண்டு வருமான வரி கணக்குகள், வெளி நாட்டு சொத்துக்கள் விவரத்தையும் அளிக்க வேண்டும் என்று விதிகளில் தேர்தல் ஆணையம் திருத்தம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஜனவரி 31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அதன்பின் கடந்த ஒரு மாதத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு 10 லட் சத்து 14 ஆயிரத்து 888 மனுக்கள் வந்துள்ளன. இதில், ஆன்லைனில் 2 லட்சத்து ஆயிரத்து 279 மனுக் களும், நேரடியாக 8 லட்சத்து 13 ஆயிரத்து 609 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வேட்பு மனு தாக்கலின் இறுதி நாள் வரையில் புதிய மனுக்களையும் பெறுவோம். ஆனால், அதற்கு 10 நாட்கள் முன்வரை கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது மட்டுமே நடவடிக் கைகள் எடுக்கப்படும். வாக்காளர் கள் 1950 என்ற இலவச தொலை பேசி எண்ணில் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பரிசோதிக் கலாம். இல்லாவிட்டால், உடனடி யாக விண்ணப்பிக்கலாம்.
வாக்குச்சாவடிகள்
1,400 வாக்காளர் களுக்கு மேல் உள்ள பகுதி களில் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. எனவே, வாக்குச் சாவடி விவரங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். கடந்த 2018-ம் ஆண்டுவரை 65 ஆயிரத்து 972 வாக்குச் சாவடிகள் இருந்தன. தற் போது 67 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகளாக அது உயர்ந்துள்ளது. தற்போது மேலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங் கள் வந்துள்ள நிலையில், கூடுதலாக வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மக்களவை தேர்தலில் வாக்களித்த சின்னத்தை அறியும் விவிபாட் இயந்திரம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன் படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 67 ஆயிரத்து 932 மின்னணு இயந்திரங்கள், 91 ஆயி ரத்து 902 கட்டுப்பாட்டு இயந் திரங்கள், 88 ஆயிரத்து 447 விவிபாட் இயந்திரங்கள் உள்ளன. 16 வேட்பாளர்களுக்கு மேல் அதிகரித்தால் கூடுதல் மின்னணு இயந்திரம் இணைக்கப்படும். இவை போதுமானதாக இருந் தாலும், கூடுதலாக 4 ஆயி ரத்து 950 மின்னணு இயந் திரங்கள், 4 ஆயிரத்து 460 கட்டுப் பாட்டு இயந்திரங்கள், 16 ஆயிரத்து 260 விவிபாட் இயந்திரங்களை தேர்தல் ஆணையம் தமிழகத் துக்கு அளித்துள்ளது.
இந்த தேர்தலில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 532 பணியாளர் கள் பயன்படுத்தப்பட உள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதும், 3 அல்லது 4 நாட்களில் அவர் கள் பிரிக்கப்படுவார்கள். சொந்த தொகுதி, பிறந்த ஊரில் அவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அதே மாவட்டத்தில் வேறு பகுதியில் பணி வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.
பிரமாண பத்திரம்
வேட்பாளர் அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது, அளிக்கும் பிரமாண பத்திரத்தில் சில திருத்தங்களை ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக, முதலில் ஒரு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை அளிக்க வேண்டும். தற்போது 5 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை அளிக்க வேண்டியிருக்கும். இதுதவிர, இந்து சொத்துரிமை சட்டப்படி யான சொத்துக்களின் விவரங் கள், வெளிநாட்டில் உள்ள சொத் துக்களின் விவரங்களை குறிப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. வருமான வரி கணக்கு இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்ச மாக ரூ.70 லட்சம் வரை செலவழிக்கலாம்.
11 வகை ஆவணங்கள்
ஒரு வாக்காளர் வாக்களிக்க செல்லும் போது, அவரது வாக்கை யாரேனும் முன்னதாக செலுத்தியிருப்பது அறியப்பட் டால், அவர் வாக்குச்சாவடி அதிகாரியிடம் தெரிவித்து, அவர் அளிக்கும் வாக்குச்சீட்டு படிவத்தை பூர்த்தி செய்து, உறையில் வைத்து அளிக்க வேண்டும். தேவை ஏற்படின் அந்த வாக்கு எண்ணிக்கை யில் சேர்க்கப்படும். இம்முறை புகைப்பட வாக்காளர் சீட்டு வழங் கப்படும். ஆனால், அதை வைத்து வாக்கை செலுத்த முடியாது. தேர்தல் ஆணையம் அனுமதித் துள்ள 11 வகையான ஆவணங் களை கொண்டே செலுத்த முடியும். இது தவிர, தேர்தலின் போது பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில விதிகளை அமல்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
200 கம்பெனி துணை ராணுவம்
மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக தமிழகத்துக்கு 200 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்ப வேண்டும் என்று கோரியிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது 140 கம்பெனிகள் வரவழைக்கப்பட்டதாகவும், ராணுவம் மற்றும் துணை ராணுவ கம்பெனிகளில் வீரர்கள் எண்ணிக்கை வேறுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT