Last Updated : 19 Mar, 2019 08:08 AM

 

Published : 19 Mar 2019 08:08 AM
Last Updated : 19 Mar 2019 08:08 AM

வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் உகந்தது இல்லை; அந்தக் காலத்து மக்கள் நேர்மையாக இருந்தனர்: நூற்றாண்டை எட்டும் முன்னாள் எம்.பி. காளியண்ணன் நெகிழ்ச்சி

அந்தக் காலத்தில் கல்வியறிவு குறைவாக இருந்தாலும் மக்கள் நேர்மையானவர்களாக இருந்த னர் என்று திருச்செங்கோட்டை சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டை சேர்ந்த டி.எம்.காளி யண்ணன் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1952-ல் நடந்த முதல் தேர்த லில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட் டவர்.

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது 99 வயதை தொட்டுள்ள டி.எம்.காளியண் ணன், அந்தக் கால தேர்தல் அனுப வங்கள் குறிந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நீங்கள் முதன்முதலில் எந்தத் தேர்தலில் போட்டியிட்டீர்கள், அப்போது ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரம் இருந்ததா?

காங்கிரஸ் கட்சி சார்பில் 1952-ல் ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த முதல் தேர்தல் அது. அப்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கமெல் லாம் கிடையாது.

ராசிபுரம் தொகுதிக்கு உட் பட்ட போதைமலை என்ற மலைக் கிராமத்தில் ஓட்டு கேட்டுச் சென்றபோது, ‘பாட்டு பெட்டி வைத்து பாட்டு போட்டுக் காட்டு வீர்களா?’ என கேட்டனர். அதற்காக ரேடியோவை தலைச்சுமையாக கொண்டு சென்று பாட்டு போட்டு காண்பித்தோம். இதுபோன்று சிறுசிறு தேவைகளை மட்டுமே மக்கள் எதிர்பார்த்தனர். கல்வி யறிவு குறைவாக இருந்தாலும் மக்கள் நேர்மையாக இருந்தனர்.

வாக்குக்கு பணம் கொடுக் கும் கலாச்சாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

மனித வாழ்க்கையில் பணம் என்பது தவிர்க்க முடியாதது. காமராஜரைப்போல ஒரு ஆளுமைமிக்க தலைவராக இருந் தால், அந்த ஆளுமைக்கு எதிராக வாக்குக்கு பணம் கொடுக்கப் பட்டாலும், அந்த ஆளுமை வெற்றி பெற்றுவிடும். தற்போதைய சூழ லில் பணம்தான் வெற்றி - தோல்வி என்ற முடிவை நிர்ணயம் செய் கிறது. பணம் முழுமையாக ஆக்கிர மிப்பு செய்யக்கூடாது. இந்தக் கலாச்சாரம் உகந்தது இல்லை.

அரசியல் கட்சியினர் வேட்பா ளர்களை அறிவிக்கும்போது அந்தப் பகுதியில் உள்ள பெரும் பான்மை சமுதாயத்தைச் (ஜாதி) சேர்ந்தவர்களையே அறிவிக் கிறார்களே? இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த கலாச்சாரம் இப்போது மட்டுமல்ல. அந்தக் காலம் முதல் அந்தந்த பெரும்பான்மை சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்கள் சார்ந்தவர்களை நிற்க வைக்கும் நடைமுறை இருந்துவந் தது. ஆனால், வெளிப்படையாக தெரியாமல் இருந்தது.

அதிமுக அரசை பாமக தொடர்ந்து குறை கூறிவந்த சூழலில், அதிமுகவுடன், அக்கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து..

தேர்தல் சமயத்தில் அமைப்பது தான் கூட்டணி. இது தற்காலிக மானதுதான். ஆனால், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தா லும் தற்போதைய சூழலில் ஜாதி யும், பணமும்தான் வெற்றி - தோல் வியை நிர்ணயம் செய்கின்றன.

மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்?

இதை இப்போதே சொல்ல இயலாது. அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அதை மக்கள் உள்வாங்குவதைப் பொறுத்தது வெற்றி - தோல்வி. இது தேர்தலுக்கு முந்தைய தேதி வரை மாறிக்கொண்டே இருக் கும்.

நடிகர்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதுபோன்ற புதிய கட்சிகள் உதயமாவது குறித்து தங்கள் கருத்து என்ன?

புதிய கட்சிகள் உருவாவது அவசியமானதுதான். ஒருவர் கட்சி ஆரம்பிக்கிறேன் என கூறுகிறார். ஆனால், ஆரம்பித்தபாடில்லை. சினிமாவை பார்த்துதான் ஒவ் வொன்றையும் முடிவு செய்ய வேண்டும் என்றால், அரசியலே தேவை இல்லை. அரசியல் அந்த அளவுக்கு மோசமாகிவிட வில்லை. கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இங்கு நல்லது செய்தவர்களுக்கே ஓட்டுப் போட ஆளில்லை. செய்யப்போகிறேன் என அவர் கூறுகிறார். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு டி.எம்.காளியண் ணன் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x