Last Updated : 23 Mar, 2019 08:26 AM

 

Published : 23 Mar 2019 08:26 AM
Last Updated : 23 Mar 2019 08:26 AM

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைக் கிராம கோயிலில் சூறைத்தேங்காய் உடைத்து பிரச்சாரம் தொடங்கினார் முதல்வர்: நாட்டின் பாதுகாப்பு கருதி மோடிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தல்

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைக் கிராமத்தில் விநாயகர் கோயிலில் சூறைத்தேங்காய் உடைத்து பிரச்சாரத்தைத் தொடங் கிய முதல்வர் பழனிசாமி, “நாட்டின் பாதுகாப்புக்கு நிலை யான ஆட்சி தேவை என்பதால், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் ஆதரவளிக்க வேண் டும்” என்று கூறி வாக்கு சேகரித் தார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக-வுக்கு ஒதுக் கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மலைக் கிராமமான கருமந்துறை பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் முதல்வர் நேற்று வழிபட்டார். அவருடன் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், பாமக மாநில துணைச் செயலாளர் அருள் உள்ளிட்டோரும் கோயிலில் வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து, விநாயகர் கோயிலில் சூறைத்தேங்காய் உடைத்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார்.

அனைத்திலும் வெற்றி

முதல்வருடன் கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகியோரும் உடனிருந்தனர். அவர் கள் இருவரையும் ஆதரித்து பிரச் சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

கருமந்துறை வெற்றி விநாய கரை வழிபட்டு நாம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதால், 40 மக்களவைத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். மக்களவைத் தேர்தல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியது. நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான், மக்கள் வளமாக, நிம்மதியாக வாழ முடியும். மத்தியில் நிலையான ஆட்சி உறுதியாக செய்யப்பட்டால் நாட்டுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அந்த அடிப்படையில் பிரதமர் மோடி, மீண்டும் பிரதமராக வரவேண்டும். நாம் அவருக்கு துணை நிற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை மோடி உறுதி செய்துள்ளார்.

நமது ராணுவத்தினர் 40 பேர் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டனர். அந்த தீவிரவாதிகளை அழிக்க, நமது விமானப்படை குண்டு மழை பொழிந்தது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், அண்டை நாட்டு வீரர்களிடம் பிடிபட்டபோதும் அவரை, பத்திரமாக மீட்டு வந்தவர் பிரதமர் மோடி. எந்த நாட்டிலும் இதுபோன்ற வரலாறு கிடையாது. எதிரி நாட்டினரை தூளாக்கக்கூடிய வலிமை பிரதமர் மோடிக்கு மட்டுமே உண்டு.

பாஜக-வுடன் திமுக கூட்டணி

மதவாதக் கட்சியான பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பாஜக-வுடன் திமுக கூட்டணி வைத்து, அதில் முரசொலிமாறன் அமைச்சராக இருந்தபோது, பாஜக மதவாதக் கட்சியாக அவர்களுக்கு தோன்ற வில்லையா? அவர்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்துக்கு ஏதாவது திட்டங் களை செய்தார்களா?

காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினை களுக்கு தீர்வு காணவில்லை. இந்த பிரச்சினைகளுக்கு சட்டத்துறை மூலமாக தீர்வு கண்டவர் ஜெயலலிதா.

ஒருசில சூழ்ச்சிகாரர்களால் 18 எம்எல்ஏ-க்களை வசப்படுத்தி ஆட்சியை கவிழ்க்கப்பார்த்தனர். இடைத்தேர்தலில் அந்த தொகுதிகள் அனைத்திலும் அதிமுக வெற்றிபெறும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக- தலைமையிலான கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொழுகைக்காக பிரச்சாரம் நிறுத்தம்

கருமந்துறையில் முதல்வர் பழனிசாமியுடன் இணைந்து வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் சுதீஷ், அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் புத்திரகவுண்டம்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய இடங்களில் வேட்பாளர் இன்றி தானே தேமுதிக-வுக்காக வாக்கு சேகரித்தார். வாழப்பாடியில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 'பாங்கு' ஒலித்தது. உடனே முதல்வர் தனது பேச்சை நிறுத்தி விட்டார். தொழுகை முடிந்ததும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கருமந்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அந்த வழியே ஆம்புலன்ஸ் வந்தது. உடனே முதல்வர் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு அந்த வாகனம் சென்ற பின்னார் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது, சாலையோர கடையில் முதல்வர் தேநீர் அருந்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x