Published : 05 Mar 2019 08:15 AM
Last Updated : 05 Mar 2019 08:15 AM
நீலகிரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக, பாஜகவும் அதே தொகுதியில் போட்டி யிட ஆர்வம் காட்டி வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.ராசா, தனி தொகுதியாக இருந்தவரை சொந்த தொகுதியி லேயே போட்டியிட்டு வந்தார். தொகுதி மறுவரையறைக்கு பிறகு பெரம்பலூர் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.
எனவே, பொது தொகுதியாக இருந்து தனித் தொகுதியாக மாறிய நீலகிரியில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 தேர்தலில் 2-வது முறையாக நீலகிரியில் போட்டி யிட்ட ஆ.ராசா தோல்வி அடைந்தார். அறிமுகமே அல்லாத அதிமுக வேட்பா ளர் சி.கோபாலகிருஷ்ணன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தற்போது 3-வது முறையாக நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா விருப்ப மனு அளித்துள்ளார்.
எதிர் தரப்பில் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக சார்பில் தற்போதைய எம்.பி.யான சி.கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் மகன் லோகநாதன் உட்பட 27 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள் ளனர்.
மக்களின் பல ஆண்டு கோரிக்கை யான அத்திக்கடவு - அவிநாசி திட்டத் துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், இதனால் பயன்பெறப் போகும் அவிநாசி, மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை தொகுதிகள் நீலகிரி மக்களவை தொகுதியில் வருகின்றன. எனவே, வெற்றிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர்.
ஏற்கெனவே, 1998, 1999-ல் அதிமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜகவுக்கு நீலகிரி தொகுதி ஒதுக்கப்பட்டு, மாஸ்டர் மாதன் இருமுறையும் வெற்றி பெற்றார். இதனால், பாஜகவும் இத்தொகுதியில் ஒரு கண் வைத்துள்ளது.
இதற்கிடையில், தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் கடந்த ஒருமாத காலத்தில் நீலகிரியில் பலமுறை ஆய்வு செய் துள்ளார்.
உதகை மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். பாஜக வேட் பாளராக இவர் களமிறங்கக்கூடும் என்ற பேச்சும் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT