Published : 13 Mar 2019 10:38 AM
Last Updated : 13 Mar 2019 10:38 AM

ஈவிகேஎஸ் முதல் குஷ்பு வரை.. ‘பூட்டு’ தொகுதிக்கு போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய திமுக, அதிமுக

திண்டுக்கல் தொகுதியில் திமுக, அதிமுக மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட விரும்புவதால் கடைசி நேரத்தில் அத்தொகுதியை ஒதுக்குவதில் இரு பிரதான கட்சிகளும் திணறி வருகின்றன.

திண்டுக்கல் தொகுதியில் முதலில் அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்படும் என்ற நிலை இருந்தது. பின்னர், அதிமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசலால் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கும் நிலை உருவானது. இதனால் அக்கட்சி மாநிலப் பொருளாளர் திலகபாமாவுக்காக திண்டுக்கல் தொகுதியை பாமக கேட்டு வருகிறது.

இருப்பினும், பாரம்பரிய தொகு தியை விட்டுக் கொடுக்கக் கூடாது என அதிமுகவில் ஒருதரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனால், திண்டுக்கல்லில் அதிமுகவா அல்லது பாமகவா என்ற குழப்பம், அக்கட்சி தொண்டர் களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 41 பேரில் 37 பேர் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இவர்களிடம், ‘அதிமுக போட்டியிட்டாலும், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினாலும் தொகுதியில் முழு வீச்சில் வேலை செய்ய வேண்டும்’ என்று கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது.

அதிமுக சார்பில் தற்போதைய எம்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணன், மாவட்டச் செயலாளர் மருதராஜ், அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் மகன்கள் என பலர் இத்தொகுதி யில் போட்டியிட முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் கூட் டணிக் கட்சியான பாமகவுக்கே திண்டுக்கல் ஒதுக்கப்படும் என பரவலான கருத்தும் நிலவுகிறது.

திமுக கூட்டணியிலும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே திண்டுக்கல்லில் களமிறங்க போட்டி நிலவுகிறது.

திமுக போட்டியிடும் பட்சத்தில் ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் வேலுச்சாமி போட்டி யிடுவது உறுதியாகி உள்ளது.

திமுகவிடம் கேட்ட டெல்லி

இருந்தபோதிலும், திண்டுக் கல் தொகுதியை தங்களுக்கு கண்டிப்பாக ஒதுக்கும்படி திமுக தலைமையிடம் டெல்லி காங்கிரஸ் தலைமை கேட்டுள்ளதால், திமுக போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. ஒருவேளை திண்டுக்கல் காங்கிரஸுக்கு ஒதுக்கும்பட்சத்தில் அங்கு போட்டியிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு உள்ளது. இவர் வழக்கமாக போட்டியிடும் ஈரோடு, மதிமுக வுக்கு ஒதுக்கப்படுவதால், திண்டுக் கல்லில் போட்டியிட விருப்பம் தெரிவித்து டெல்லி தலைமையிடம் காய் நகர்த்தி வருகிறார்.

சென்னை டு திண்டுக்கல்

நடிகை குஷ்பு சென்னையில் போட்டியிட விரும்பிய நிலையில் அங்கு ஒரு தொகுதியைக்கூட திமுக விட்டுக்கொடுக்காததால், அவரும் திண்டுக்கல்லில் போட்டி யிட டெல்லி தலைமையிடம் பேசி வருவதாக காங்கிரஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த போட்டியில் திண்டுக் கல்லில் திமுகதான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் போராடி வருகின்றனர். தொகுதியை பெறு வதில் திமுகவினர் வெற்றி பெறு வார்களா? விரைவில் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x