Published : 14 Mar 2019 04:42 PM
Last Updated : 14 Mar 2019 04:42 PM
கேரள எல்லையில் உள்ள இரட்டை வாக்காளர்களை கண்டறிய புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 206 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தேனி தொகுதி கேரள எல்லையில் அமைந்துள்ளதால், பலரும் அங்கு தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் பலரும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதால் கேரளா, தமிழ்நாடு என்று இரண்டு வாக்காளர் அட்டைகளை வைத்துள்ளனர்.
தேர்தல் நேரங்களில் இது அதிகாரிகளுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி ஒருவர் ஒருமுறைதான் வாக்க ளிக்க வேண்டும். ஆனால்,கேரளா, தமிழகத்தில் வெவ்வேறு நேரங் களில் தேர்தல் நடப்பதால்அவர்கள் இரண்டு மாநிலங்களிலும் வாக்களிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தும் முடியவில்லை. இதற்காக தமிழக, கேரள அதிகாரிகள் தனிக் கூட்டம் நடத்தி தங்கள் வாக்காளர் பட்டியலை பரிமாறிக் கொண்டு சரிபார்ப்பர். இது கூடுதல் சுமையாக இருந்தது. இந்நிலையில் வருகிற தேர்தலில் இரட்டை வாக்காளர்களை கண்டறிய புதிய மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்இ. எனும் இந்த தொழில் நுட்பம் இரட்டை வாக்காளர்களை கண்டறிய போட்டோ, பெயர், முகவரி என ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து பட்டியல் இடுகிறது. இறுதியில் சம்பந்தப்பட்ட கள ஆய்வாளர் மூலம் உண்மை நிலை அறிந்து பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. இது குறித்து தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ம. பல்லவி பல்தேவ் கூறியது: இடுக்கி மாவட்டம் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதில் பலரும் இரு மாநில வாக்காளர்களாக உள்ளனர். தற்போது புதிய மென்பொருள் மூலம் 206 பேர் வரை நீக்கப்ட்டுள்ளனர். தொடர்ந்து இவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT