Published : 19 Mar 2019 10:56 AM
Last Updated : 19 Mar 2019 10:56 AM
தென்காசி மக்களவைத் தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். மக்களுக்கு அறிமுகம் இல்லாத சின்னத்தில் போட்டியிட்டதே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் தற்போதைய அதிமுக எம்பி மீதான அதிருப்தி, திமுக அமைத்துள்ள வலுவான கூட்டணி ஆகியவை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிமுகவினர் கருதினர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சொந்த ஊர், உடுமலைப்பேட்டை அருகே உள்ள குடிமங்கலம் கிராமம். எம்பிபிஎஸ், எம்டி படித்துள்ளார். மனைவி, மகள், மகன் உள்ளனர். 3 பேரும் மருத்துவம் படித்துள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினராக 2 முறை டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், மக்களவைத் தேர்தலில் இவருக்கு இதுவரை வெற்றி கைகூடவில்லை.
பின்னடைவுக்கு காரணம்
சொந்த செல்வாக்கால் கடந்த 1996-ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். 2011-ல் அதிமுக கூட்ட ணியில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார் ஆனால், தென்காசி மக்களவைத் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு தோல்வி யையே தழுவினார். திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்தது டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பின் னடைவை ஏற்படுத் தியதாகக் கூறப் பட்டது.
தென்காசி தொகுதியில் பாஜக, தேமுதிக வுக்கு பர வலாக தொண்டர் கள் உள்ள னர். அத னால், இந்த முறை கூட்டணி பலத்தால் டாக்டர் கிருஷ்ணமி வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையே அவர் பிரதிபலித்து வருகிறார். அதனால், பாஜக தொண்டர்கள் அவருக்கு தீவிர பணியாற்றுவார்கள் என்று நம்புகிறார்.
தென்காசி தொகுதி தற்போதைய அதிமுக எம்பி மீதான அதிருப்தி டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுகவினர் கருதுகின்றனர். மேலும், 28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி தொகுதியில் திமுக போட்டியிடுவதால் அக்கட்சி தொண்டர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி பலத்தால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என திமுகவினர் கருதுகின்ற னர்.
டாக்டர் கிருஷ்ண சாமி தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சின்னம் கிடைத்ததும் பிரச்சாரத்தை தீவிரப் படுத்த புதிய தமிழ கம் கட்சியினர் திட்ட மிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT