Published : 23 Mar 2019 04:14 PM
Last Updated : 23 Mar 2019 04:14 PM
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுகவால் எப்படி விவசாயம் உள்ளிட்ட கடன்களைத் தள்ளுபடி செய்யமுடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்திலும் ஸ்டாலின் திருவாரூரிலும் தங்களின் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில் ஈபிஎஸ் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் அக்னி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் செய்தார்.
திருப்பத்தூரில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர், ''நம்முடைய கூட்டணி மெகா கூட்டணி. திமுக ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரதமர். கொள்கை இல்லாத கூட்டணி அவர்களுடையது. அதிமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துள்ளோம்.
திமுகவில் தினந்தினம் தேர்தல் அறிக்கை. அனைத்தும் பொய் அறிக்கை. ஆட்சியில் இருப்பது நாம் (அதிமுக). அவர்கள் எப்படிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியும்?
தமிழ்நாட்டில் ஜெயலலிதா வழியில் நடைபெறும் ஜெ. அரசு, மின் மிகை மாநிலமாகத் திகழ்கிறது. உபரி மின்சாரத்தைத் தயார் செய்துகொண்டிருக்கிறோம். இங்கு கட்டப் பஞ்சாயத்து கிடையாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது'' என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT