Published : 23 Mar 2019 10:35 AM
Last Updated : 23 Mar 2019 10:35 AM
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் எஸ்எம்எஸ்சில் பிரச்சாரம் செய்தால் ரூ.20, மாட்டு வண்டி பயன்படுத்தினால் ரூ.500, சைக்கிள் ரிக் ஷாவில் சென்றால் ரூ.375 என தேர்தல் அதிகாரிகள் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நிலவும் விலைவாசிக்கு ஏற்ப வேட்பாளர்கள் தினசரி செய்யும் செலவினங்களுக்கான விலைப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர்.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் சைவச் சாப்பாடு ரூ.60, அசைவ சாப்பாடு ரூ.180, தயிர் சாதம் ரூ.40, மற்ற கலவைச் சாதம் ரூ.50, முட்டை பிரியாணி ரூ.120, கோழிப் பிரியாணி ரூ.150, மட்டன் பிரியாணி ரூ.180, பிளைன் பிரியாணி ரூ.70, சைவப் பிரியாணி ரூ.80, டீ ரூ.10, காபி ரூ.12, 200 மி.லி., குளிர்பானம் 20, ஒரு லி., மினரல் வாட்டர் ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சைக்கிள் ரிக்சா நாள் வாடகை ரூ.375, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. ஆயிரம், ஓட்டுநர் கூலி ரூ.370, கலைக்குழுவுக்கு ரூ.10,500, கொடி மரத்துக்கு ரூ.60, பெயிண்டர் தினக்கூலி ரூ.600, சமையலர் தினக்கூலி ரூ.480, கணினி இயக்குபவர், தட்டச்சர் தினக்கூலி ரூ.450, மின்னஞ்சல், எஸ்எம்எஸ் அனுப்ப ரூ.20, கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டி நாள் ஒன்றுக்கு ரூ.320, ஏர்கூலர் சிறியது ரூ.700, பெரியது ரூ.1,300, மகால் வாடகை ரூ.25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, இலகுரக ஓட்டுநருக்கு ரூ.350, நடுத்தர வாகன ஓட்டுநருக்கு ரூ.450, கனரக வாகன ஓட்டுநருக்கு ரூ.600, பேருந்து நடத்துநருக்கு ரூ.400, கிளீனருக்கு ரூ.300 என தினக்கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாதாரண கொட்டகைக்கு ரூ.950, மேடையுடன் கூடிய கொட்டகைக்கு ரூ.4,850, சாமியானா ரூ.2,500, துணி தோரணம் சதுர அடி ரூ.450, துணிக் கொடி ரூ.15 முதல் ரூ.50 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்களின் செலவினங்கள், அவரது செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT