Last Updated : 26 Mar, 2019 08:36 AM

 

Published : 26 Mar 2019 08:36 AM
Last Updated : 26 Mar 2019 08:36 AM

மக்களவைத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் முஸ்லிம்களை புறக்கணித்த மாநில, தேசிய கட்சிகள்

மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுகவைத் தொடர்ந்து காங்கிரஸும் வேட்பாளர் தேர்வில் இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் வழங்காதது அச்சமூகத் தினரை அதிருப்தி அடைய செய்துள் ளது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும், திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. அமமுக எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக இடையே கடும் போட்டி உள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளை தவிர்த்து, திமுக, அதிமுக தலா 20 தொகுதிகளிலும், அமமுக 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இவற் றில் ஒன்றில்கூட முஸ்லிம் வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் காங்கிரஸ் கட்சியில் இஸ்லாமியர் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. தேனி தொகுதியில் முன் னாள் காங்கிரஸ் எம்பி ஆரூண் அல்லது அவரது மகன் களமிறக்கப்படலாம் என அக்கட்சியினர் கூறி வந்தனர். இந்நிலையில் அத்தொகுதியும் இளங்கோவனுக்கு வழங்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சிறுபான்மையினர் பாஜக வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸிலும் இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப் படாதது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் கட்சி முஸ்லிம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் மாநிலப் பொதுக் குழு உறுப்பினராக உள்ள இஸ்லாமியர் ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் 18 சதவீதத்துக்கு மேலும், இந்தியாவில் 27 சதவீதத்துக்கு அதிகமாகவும் இஸ்லாமியர் வாக்குகள் உள்ளன. கடந்த 135 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் இதுவரை ஒரு இஸ்லாமியரும் பெரியளவில் வளரவில்லை. சமீபத்தில் 72 மாவட்டத் தலைவர்களில் ஒருவர் மட்டும் இஸ்லாமியர். திண்டுக்கல் மாவட்டத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து தேர்தல்களிலும் இஸ்லாமியர் களைத் தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். காங்கிரஸ் செயலர் பதவியிலும் தமிழக முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தற்போது, காங்கிரசில் 5 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதிலும் ஒரு இஸ்லாமியருக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. காங்கிரஸ் என்றாலே சிறுபான்மை யினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்கின் றனர். ஆனால் அவ்வாறு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுகவில் இஸ்லாமியர் ஒருவர் கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. தேனி தொகுதியில் இஸ்லாமியர் நிறுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்க வில்லை. இனி வரும் தேர்தல்களிலாவது இஸ்லாமியருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x