Published : 03 Mar 2019 11:41 AM
Last Updated : 03 Mar 2019 11:41 AM

விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளன. இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகம், புதுச்சேரியில் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற 26 தொகுதிகளில் 4 அல்லது 5 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கி, அத்துடன் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதிமுக - தேமுதிக தரப்பில் இறுதிக்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்,

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சமக தலைவர் சரத்குமார் இன்று திடீரென்று சந்தித்துப் பேசினார்.

அதிமுக - பாஜக கூட்டணியை சரத்குமார் ஏற்கெனவே விமர்சித்திருந்ததால் இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, நான் சட்டப்பேரவையை நோக்கிப் பயணித்து வருகிறேன். தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் என்று சரத்குமார் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x