Published : 10 Mar 2019 07:49 AM
Last Updated : 10 Mar 2019 07:49 AM
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளா ளரை நீக்க வேண்டும் என்ற எங்கள் பிரதான கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்ததே அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்ந்ததற்கு காரணம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தெரிவித்துள்ளார்.
‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு கிருஷ் ணசாமி அளித்த சிறப்பு பேட்டி:
நீங்கள் அதிமுக - பாஜக கூட் டணியில் சேர என்ன காரணம்?
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளா ளரை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த நிலையில், மதுரையில் சமீ பத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘உங்கள் கோரிக்கையை உணர்வுப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். உங் களுக்கு உறுதுணையாக இருப் பேன்’’ என்று தெரிவித்தார். இதுவே எங்களுக்கு முதல் வெற்றி.
அது மட்டுமின்றி, தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்குவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
இதுதவிர ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துவதால் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளோம்.
உங்களுக்கு திமுகவைவிட அதிமுக கூடுதல் பலம் என்று கருதுகிறீர்களா?
2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டி யிட்டு 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நான்கூட பிரபலமானவன் என்று கூறலாம். அதே தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் நிலக்கோட்டை தொகு தியில் போட்டியிட்ட ராமசாமி என்பவர் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால், 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அதே ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு 400 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தேன். எனவே, அதிமுக எங்களுக்கு கூடுதல் பலம் என்று கருதுகிறோம்.
எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளீர்கள்?
கடந்த 2014 மக்களவைத் தேர்த லில் திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 2 லட் சத்து 67 ஆயிரம் வாக்குகள் பெற் றேன். இருப்பினும் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இத்தேர்தலி லும் தென்காசி தொகுதியில் போட்டி யிட விருப்பம் தெரிவித்துள்ளேன்.
முதன்மை முழக்கம்
‘வலுவான இந்தியா, வளமான தொகுதி’ என்பது என் பிரச்சாரத் தின் முதன்மையான முழக்கமாக இருக்கும்.
ஒரு மருத்துவர் என்ற பார்வை யில் நீங்கள், மோடி அரசு என்ன செய்திருப்பதாக கருதுகிறீர்கள்?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள் ளது. ஆனால், பெரும்பாலான திட் டங்களுக்கு விளம்பரமே இல்லை. முக்கியமாக, பொருட்களின் விலை உயரவில்லை. உயிர்காக்கும் மருந் துகளின் விலை குறைக்கப்பட்டுள் ளது. இதய அடைப்பை சரி செய்யும் ‘ஸ்டென்ட்’ சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூ லிக்கக் கூடாது என்று சட்டம் இயற் றப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்பு
மூட்டு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நவீன அறுவை சிகிச்சை உபகரணங் களின் விலையைக் குறைத்து, மேற்கண்ட சிகிச்சைகளுக்கான கட்டணக் குறைப்பை சாத்தியமாக்கி உள்ளனர். இந்த கட்டணம் ஐந்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட் டம் மூலம் நாட்டின் எந்த பகுதியி லும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
மோடி மதச்சார்பு உடையவர் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே?
பாஜகவையும், பிரதமர் மோடி யையும் மதம் என்ற கோணத்தில் மட்டுமே சிலர் பார்க்கின்றனர். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர். நாட்டின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம் பரியத்தை பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர். இதுதொடர்பான நடவ டிக்கைகளை அவர்கள் பார்ப்ப தில்லை.
கலவரங்கள் இல்லை
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் சாதி, மதக் கலவரங்கள் இல்லை. தொழிலாளர் பிரச்சினைகள் கிடையாது. பாகிஸ்தான் எல் லையைத் தாண்டி நமது விமானப் படையினர் துல்லியத் தாக்குதல் நடத்த வழிகாட்டியதன் வாயிலாக மேலும் வலிமையான பிரதமர் ஆகியிருக்கிறார் மோடி. பாகிஸ் தான் தவிர்த்து, மற்ற அனைத்து அண்டை நாடுகளையும் நட்பு நாடுகள் ஆக்கியிருக்கிறார்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT