Published : 02 Mar 2019 09:34 AM
Last Updated : 02 Mar 2019 09:34 AM

அதிமுக கூட்டணியில் தேமுதிக: அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணை வது உறுதியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சு நடத்தி வந்தன. பாமக வுக்கு நிகராக 7 தொகுதிகளை தேமுதிக கேட்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் நேரில் சந்தித்து பேசினார்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, காங்கிரஸ், முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூ னிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 4 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதால், தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை திமுக கைவிட்டது.

அதேநேரம், தேமுதிகவை எப்படி யாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமகவும் இதை விரும்பியதால், அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்த னர். 4 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங் களவை தொகுதி தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தேமுதிக தரப்பில் 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கோரப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், இழுபறி நிலை நீடித்தது.

இறுதியாக, அதிமுக தரப்பில் கூறப் பட்ட மக்களவை, மாநிலங்களவை தொகுதிகளுடன், உள்ளாட்சித் தேர்தலி லும் கூட்டணி அமைத்து போதிய இடங்களை பெறுவது, 21 தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என பேசப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு முதல்முறையாக கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் நேற்று வந்தார். 2 மாதங்களுக்குப் பிறகு, கட்சி அலுவலகத்துக்கு வந்த அவரைக் காண தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வத்தோடு திரண்டிருந்தனர்.

தேர்தல் பணிகள் தொடர்பாக 40 நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோ சனை நடத்தினார். இதில் துணை செயலா ளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, பொருளா ளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யாருடன் கூட்டணி வைப்பது, தேமுதிக வுக்கு சாதகமான தொகுதிகள் உள் ளிட்ட அம்சங்கள் குறித்து நிர்வாகிகளின் கருத்தை விஜயகாந்த் கேட்டறிந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதிமுக - தேமுதிக தரப்பில் இறுதிக் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக அதிமுக அமைச்சர் கள் விரைவில் விஜயகாந்தை சந்தித்து பேசுவார்கள். அதன்பிறகு விஜயகாந்துடன் முதல்வர், துணை முதல்வர் பேசி கூட்டணியை அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள். கூட்டணி அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று அதிமுக வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x