Published : 21 Mar 2019 06:32 AM
Last Updated : 21 Mar 2019 06:32 AM
அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக் கப்படும். வாகனங்களில் கட்சிக் கொடியைப் பயன்படுத்த தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல், 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத் தில் பண நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளன. இந்நிலையில் வேட்பாளர் கள் வாகனப் பயன்பாடு, ரொக்கப் பணம் பறிமுதல் உள்ளிட்டவை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரத்தின்போதும், வேட்பு மனுத்தாக்கலின் போதும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கள் தங்கள் வாகனங்களில் கட்சிக் கொடியைப் பயன்படுத்த, சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதேபோல், கூட்டணிக் கட்சியினரின் சின்னத்தைப் பயன் படுத்தவும் அனுமதி பெற வேண்டும்.
சென்னை தலைமை செயலகத் தில் நேற்று (19-ம் தேதி) அனைத்து வங்கி அதிகாரிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத் தில், வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றம், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பணத்தை கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
குறிப்பாக ஏடிஎம் மையங் களுக்கு பணம் கொண்டு செல்லு தல், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வங்கி சார்பில் பணம் எடுத்துச் செல்லும் போது, ரிசர்வ் வங்கியின் விதி களுக்கு உட்பட்டு உரிய ஆவணங் களை உடன் வைத்திருக்க வேண் டும். ஒரு மாவட்டத்தில் இருந்து வேறொரு மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படும் போது சம் பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதி காரியிடம் கடிதம் பெற வேண்டும்.
மேலும், நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் அல்லது குறைந்த தொகை பரிவர்த்தனை கொண்ட வங்கிக் கணக்குகளில் திடீரென அதிகமான தொகை பரிவர்த்தனை நடந்தாலும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டாலும் வருமானவரித் துறைக்கு தெரி விக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதுதவிர, இணைய வழியில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிமாற்றம் மற்றும் அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு, கட்சிப் பிரமுகர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்தால் உடனடி யாக வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில் தமிழகத் துக்கு சிறப்பு செலவின பார்வை யாளரை இந்தியத் தேர்தல் ஆணை யம் தற்போது நியமித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விலைப் பட்டியல்
அரசியல் கட்சிகள் உணவு, வாகனம் உள்ளிட்டவற்றுக்காகச் செலவிடும் தொகை குறித்து தேர்தல் ஆணையம் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இது மாவட் டத்துக்கு மாவட்டம் மாறுபடும். எனவே, அந்தந்த மாவட்டத் தேர் தல் அதிகாரிகள் அங்குள்ள சூழல், விலை இவற்றை கணக்கிட்டு, குறிப் பிட்ட தொகையை நிர்ணயிப்பார் கள். அதன் அடிப்படையில் செலவுக் கணக்கு கணக்கிடப்படும். அந்தந்த கட்சிகள் தயாரிக்கும் கணக்கு தவிர, செலவின பார்வை யாளர்கள் ஒவ்வொரு வேட்பாளருக் கும் தனியான கணக்கை தயாரிப்பார்கள்.
94 கிலோ தங்கம் பறிமுதல்
தமிழகத்தில் நேற்று (19-ம் தேதி) வரை ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடியே 80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. 19-ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.3 கோடியே 76 லட்சம் சிக்கியது. மதுரையில் இருந்து கரூருக்கு கிருபாகரன் என் பவர் கொண்டு வந்த ரூ.5 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 94 கிலோ தங்கம் சோதனையில் சிக்கியுள் ளது. இதுதவிர, 1.8 கிலோ வெள்ளி, மதுபான பாட்டில்கள் மற்றும் சிறிய வகை பரிசுப் பொருட்களும் சிக்கியுள்ளன. பணம், பொருட்கள் பறிமுதல் தொடர்பாக இதுவரை 210 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பணியாளர்களுக்கு பயிற்சி
ஆசிரியர், அரசு ஊழியர்கள் என 3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர் களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி 24-ம் தேதி தொடங்குகிறது.
சிவிஜில் செயலி மூலம், தமிழகம் தொடர்பாக 470 புகார்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட் டுள்ளன. அதில் 119 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT