Published : 23 Mar 2019 10:34 AM
Last Updated : 23 Mar 2019 10:34 AM
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தலில் காங்கி ரஸ் 6 முறையும், தமாகா ஒரு முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், 1967-ல் சுயேச் சையும், 1971-ல் பார்வர்ட் பிளாக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
1999, 2004, 2009, 2014 ஆகிய 4 நான்கு தேர்தல்களில் அதிமுக, திமுக நேரடியாக மோதின. ஆனால் 2019-ல் அதிமுக, கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும், திமுக, கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கும் ஒதுக்கியுள்ளன. இதற்குக் காரணம் இரண்டு கட்சிகளிலும் உள்ள உட்கட்சிப் பூசல்களும், கோஷ்டி பூசல்களுமே. கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக, திமுக தொண்டர்கள் உற்சாகம் இழந் துள்ளனர். திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டு அவர் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார். பரமக்குடி சட்டப் பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சம்பத்குமாரும் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட் டார். இருந்தபோதும் திமுக தொண் டர்கள் மத்தியில் பெரிய ஆரவாரம் இல்லை. அமமுக வேட்பாளர் வ.து.ந. ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து வருகிறார். வரும் 29-ம் தேதி சின்னம் உறுதியானதும் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
அதிமுக கூட்டணியில் ராம நாதபுரம் தொகுதி பாஜக வேட் பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இன்னும் தேர்தல் பணிக்குத் தயாராகவில்லை. வேட்புமனு தொடங்கி 4 நாளாகியும், ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT