Published : 22 Mar 2019 05:34 AM
Last Updated : 22 Mar 2019 05:34 AM
மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழகத் தில் இதுவரை 48 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டி யிட கடந்த 19-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 20 பேர், 2-ம் நாளில் 10 பேர் என 30 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் 18 பேர் மனு தாக்கல் செய்தனர்.
சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை, முதல் நாளில் 2 பேர், 2-ம் நாளில் ஒருவர் என 3 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று, ஒசூர்-2, விளாத்திகுளம்- 2 மற்றும் பெரம்பூரில் ஒருவர் என 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம், மக்களவை தேர்தலுக்கு 3-ம் நாள் முடிவில் ஒரு பெண் உட்பட 48 பேர், சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு 8 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். நாளை 23-ம் தேதி, மற்றும் 24-ம் தேதி விடுமுறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT