Published : 28 Feb 2019 04:38 PM
Last Updated : 28 Feb 2019 04:38 PM

சிவகங்கை காங். வேட்பாளர் தந்தையா? தனயனா?

திமுக கூட்டணியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில் அங்கு வேட்பாளராக களம் இறங்குவது ப.சிதம்பரமா? அல்லது அவரது மகன் கார்த்தி சிதம்பரமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மக்களவைத் தொகுதி யில் சிவகங்கை, காரைக்குடி, திருப் பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளும் அடங்கியுள்ளன. சிவகங்கை (அமைச்சர் ஜி.பாஸ்கரன்), மானாமதுரை (தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாரியப்பன் கென்னடி) ஆகிய தொகுதிகள் அதிமுக வெற்றிபெற்ற தொகுதிகள். திருப்பத்தூர் (கரு.பெரியகருப்பன்) திருமயம் (ரகுபதி), ஆலங்குடி (மெய்யநாதன்) ஆகிய 3 தொகுதிகள் திமுக வசமுள்ளன. காரைக்குடி (கேஆர்.ராமசாமி) காங்கிரஸ் வெற்றிபெற்றது. திமுக கூட்டணியை நம்பி களமிறங்கினால் வெற்றிக்கனி நிச்சயம் என காங்கிரஸ் கருதுகிறது.

2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடாமல் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கினார். இதில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றார். ஆனால், தற்போது கூட்டணி பலத்தோடு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாயிருப்பதை அறிந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுவாரா அல்லது தனது மகனையே களமிறக்குவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலிருந்து 7 முறை எம்பியாக தேர்ந் தெடுக்கப்பட்டவர். பல உயர் பதவிகளை வகித்தவர். அவர் தொண்டர்களை அரவணைத்துச் செல்பவர். எங்களது தேர்வு ப.சிதம்ப ரம்தான். ஆனால், ப.சிதம்பரம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவர் போட்டியிட வாய்ப்புக் குறைவுதான்.

பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த இளைஞருக்கு வழிவிடும் வகையில் தனது மகனுக்கு வாய்ப்பளிக்கலாம். கார்த்தி சிதம்பரத்துக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால், கட்சியில் மூத்த நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டாமலும், அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் பெயர் சொல்லி அழைப்பதும்தான் கார்த்தி சிதம் பரத்திடம் உள்ள குறையாகும். தமிழக காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ப.சிதம் பரத்தின் ஆத ரவாளர் என் பதால் எப்படியும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத்தான் வாய்ப்பு அதிகம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x