Published : 21 Feb 2019 08:30 AM
Last Updated : 21 Feb 2019 08:30 AM
கொங்கு மண்டலத்தின் மிகப்பெரிய தொழிலதிபராகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும் இருந்தவர் மறைந்த பொள்ளாச்சி மகாலிங்கம். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கி தொழில் துறையிலும், ஆன்மிகத்திலும் மட்டுமே கவனம் செலுத்தினார். மகாத்மா காந்தி, வள்ளலார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் காந்தி - வள்ளலார் விழாக்களை நடத்தி வந்தார். 'ஓம் சக்தி' என்ற மாத இதழையும் நடத்தி வந்தார்.
காங்கிரஸ் தலைவராக அறியப்பட்ட பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்தில் அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சு நடைபெற்றது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன.
தமிழகத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக, ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகள் கோவை, திருப்பூர் போன்ற கொங்கு மண்டலப் பகுதிகள்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஸுக்கு இடமே கிடைக்காத நிலை யில், 1975 நெருக்கடி நிலைக்குப் பிறகு நிலைமை கொஞ்சம் மாறத் தொடங்கியது. கொங்கு மண்டலத் தில் பிறந்த சின்னுக்கவுண்டர் என்ற சுவாமி சித்பவானந்தர் ஆர்எஸ்எஸ்-ஸை ஆதரிக்கத் தொடங்கினார்.
இவர், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சர், மகாராஷ்டிர ஆளுநர் போன்ற பதவிகளை வகித்த சி.சுப்பிரமணியத்தின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் அறிமுகம்
கொங்கு மண்டலத்தில் மிகுந்த செல்வாக்கு உடையவர் சித்ப வானந்தர். அவர் மூலமே பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆர்எஸ்எஸ் அறிமுகமானது.
பொள்ளாச்சி மகாலிங்கத்தின் கல்வி நிறுவனங்களில் பலமுறை ஆர்.எஸ்.எஸ். முகாம் நடந்துள் ளது. 1984-ம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நடந்த ஆர்எஸ்எஸ் முகாமில் பேசிய சுவாமி சித்பவானந்தர், ''நான் காவியுடை அணிந்த துறவி. ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் வெள்ளாடை அணிந்த துறவிகள். ஆர்எஸ்எஸ்-ஸில் இருப்பவர்கள் அனைவரும் பாக்கியவான்கள்'' என்றார்.
இந்தப் பேச்சுக்குப் பிறகே கொங்கு மண்டலத்தில் ஆர் எஸ்எஸ் வேகமாக வளர்ந்தது. அதன் அரசியல் இயக்கமான பாஜகவும் வளர்ந்தது. பொள் ளாச்சி மகாலிங்கத்தின் சித்தப்பா மகன் ஆர்விஎஸ் மாரிமுத்து ஆர்எஸ்எஸ்-ஸின் தென் தமிழகத் தலைவராக இருக்கிறார்.
மகாலிங்கத்தின் மகன் மாணிக் கம் ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளில் பங்கேற்பவர். 2006-ல் ஆர்எஸ்எஸ்-ஸின் 2-வது தலைவர் குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு விழா கமிட்டியில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். தற்போது பாஜக தலைவர்களிடமும் நல்ல தொடர்பில் உள்ளார்.
கொங்குமண்டல பிரமுகர் களான முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் மகாலிங்கம் குடும்பத்தோடு நட் பில் உள்ளனர். அந்த அடிப்படை யில்தான் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கத்தின் இல்லத்தில் கடந்த 14-ம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT