Published : 21 Feb 2019 10:07 AM
Last Updated : 21 Feb 2019 10:07 AM

அன்புமணியை தாக்கி பேசிய உறவினர் விஷ்ணுபிரசாத்

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், தனது சகோதரியின் கணவருமான அன்பு மணி ராமதாஸை, திருச்சியில் நடை பெற்ற கூட்டத்தில் மிகக் கடுமை யாக விமர்சித்துள்ளார், காங்கிரஸ் அமைப்பு செயலாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்.

திருச்சியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆயத் தக் கூட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், அமைப்புச் செயலாளர்கள் எச். வசந்தகுமார், மயூரா ஜெயகுமார், எம்கே.விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், விஷ்ணு பிரசாத் பேசி யது: அதிமுக-பாமக கூட்டணி சேர்ந்துள்ளனர். திராவிடக் கட்சி களுடன் கூட்டணி இல்லை என்ற னர். மானங்கெட்டவர்கள்தான் திமுக, அதிமுகவுடன் சேர்வார்கள் என்றார் பெரியவர் (ராமதாஸ்). அவர் எனது சொந்தக்காரர். எனது மாமா. நான் அவரை கேட்கிறேன், இன்று என்ன நடந்துள்ளது?

10 நிபந்தனைகளை முன் வைத்து அதிமுகவுடன் சேர்ந்துள்ள தாக பாமக கூறினாலும், எதற்காக சேர்ந்தார்கள் என்று சிறு குழந் தைக்குக்கூட தெரியும். அதிமுக- பாமக கூட்டணி இடையே பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. கூட்டணி பேரம் நடத்தியுள்ளனர் என்று மக்களுக்குத் தெரியும். பாமக நம்மிடம் வந்திருந்தால் அவர்களுக்குப் பெருமை. ஆனால், அவர்களே வேறு வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்.

பாமக தலைவர் ராமதாஸை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் உட்காரக் கூட இடம் இல்லாத அறையில் அடைத்தார். வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குருவை கைது செய்து சிறையில் அடைத்த தால்தான் அவர் மரணமடைந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை குருவின் ஆன்மா எந்த ஜென்மத்திலும் மன்னிக்கவே மன்னிக்காது.

சோனியா காந்தி தந்த மத்திய அமைச்சர் பதவியை அனுபவித்து விட்டு, தற்போது அவர் முதுகில் குத்திவிட்டு ஓடுகிறீர்கள். பாஜக கூட்டணியில் வென்ற இருவரில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்களே.

நீட் தேர்வு உட்பட அனைத்து பிரச்சினைகளிலும் இவர்கள் மத்திய அரசுக்கு பக்க பலமாகத் தான் இருந்தனர்.

இவ்வாறு விஷ்ணு பிரசாத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x