Last Updated : 27 Feb, 2019 11:27 AM

 

Published : 27 Feb 2019 11:27 AM
Last Updated : 27 Feb 2019 11:27 AM

வி.ஐ.பி. தொகுதியாகிறது விருதுநகர்

மக்களவைத் தேர்தலில் வி.ஐ.பி. தொகுதியாகப் பார்க்கப்படுகிறது விருதுநகர். இத்தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந் திரன் வெற்றி பெற்றனர். மற்ற 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அவர்களில் சிவகாசி தொகு தியில் வெற்றி பெற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி பால்வளத் துறை அமைச்சராகவும், திரும ங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.பி.உதயகுமார் வருவா ய்த் துறை அமைச்சராகவும் உள்ளனர்.

சாத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன் டி.டி.வி. அணிக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போதைய மக்களவை உறுப்பினர் டி.ரா தாகிருஷ்ணன் மக்களை சந்திப் பதில்லை, அவருக்கு அலுவலகம் இல்லை, பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் இத்தொகு தியில் அதிமுகவுக்கு சற்று பின்னடைவு காணப் படுகிறது.

அதனால் வரும் மக்களவைத் தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை விருதுநகரில் களம் இறக்க அதிமுக திட்டமிட்டுள் ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தென் மாவட் டங்களில் சீட் கேட்டால் அது விருதுநகராகத் தான் இருக்கும் என்கிறார்கள் அக் கட்சியினர். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட் டியிடத் தயாராகி வருகிறார் சிவகா சியில் உள்ள மருத்துவரான அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா.

இதேபோல் திமுகவில் கூட் டணிக் கட்சிக்கே விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட உள்ள தாகவும், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அவ்வாறு காங் கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் முன் னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் களம் இறங்குவார் என் றும் கூறப் படுகிறது.

இதற்கிடையே அமமுக அணி சார்பில் முன்னாள் சபா நாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண் ணாதுரையை விருதுநகரில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் வரும் மக் களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதி வி.ஐ.பி. தொகுதியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x