Published : 28 Feb 2019 04:50 PM
Last Updated : 28 Feb 2019 04:50 PM
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மூன் றாவது முறையாக சீட் பெற ஆயத்தமாகி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகு திகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு உள்ள தொகுதிகளில் ராமநாதபுரமும் ஒன்று. கடந்த காலங்களில் இந்தத் தொகுதியில் காங்கிரஸை சேர்ந்த வ.ராஜேஸ்வரன் மூன்று முறை தொடர்ந்து வெற்றிபெற்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரும் ராமநாதபுரத்தில் தொடர்ந்து 3-வது முறையாகப் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.
2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட திருநாவுக்கரசர், தனது தனிப்பட்ட செல்வாக்கில் 1.28 லட்சம் வாக்குகளும், 2014-ல் காங்கிரஸ் சார்பாக நின்று 62,160 வாக்குகளும் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் முயற்சிமீனவர் காங்கிரஸின் தேசியச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் விசுவாசியுமான ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவும் இந்த முறை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டி யிட ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்தமுறை காங்கிரஸில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழகத்தில் இட மளிக்க ராகுல்காந்தி விரும்பு கிறாராம். ஆம்ஸ்ட்ராங் பெர் னாண்டோ மீனவர்களின் வாக்கு களைப் பெருமளவில் பெறக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி செல்லத்துரை அப்துல்லா, காங்கிரஸ் பிரமுகர் ஜே.எம்.எச். ஹசன் மவ்லானாவும் போட்டியில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT