Published : 27 Feb 2019 10:22 AM
Last Updated : 27 Feb 2019 10:22 AM

இது தேர்தல் கூட்டணிதான்; கொள்கை கூட்டணி அல்ல - பாஜக குறித்து தம்பிதுரை எம்.பி. கருத்து

பாஜகவுடன் சேர்ந்திருப்பது கொள்கைக் கூட்டணி அல்ல. வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி என்று தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார்.

அதிமுக எம்.பி. தம்பிதுரை, கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''பாஜகவை வளர்ப்பதற்காக எங்களின் கொள்கைககளை விட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள். எங்கள் கொள்கையில் இருந்து ஒருபோதும் நாங்கள் நழுவமாட்டோம். பாஜகவை வளர்ப்பது எங்களின் கொள்கையும் இல்லை.

பாஜகவுடன் அதிமுக சேர்ந்திருப்பது தேர்தலுக்கான கூட்டணி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கொள்கைக்கான கூட்டணி அல்ல.

உலக அளவில் பயங்கரவாததை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்''.

இவ்வாறு தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x