Last Updated : 07 Apr, 2019 06:40 PM

 

Published : 07 Apr 2019 06:40 PM
Last Updated : 07 Apr 2019 06:40 PM

குஜராத் தேர்தல் களம் 2019: சொந்த மாநிலத்தில் மோடி அலை மீண்டும் வீசுமா?

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின்  சொந்த மாநிலம். கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்தது. கடந்த தேர்தலில் மோடி அலையை உணர்த்திய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பாஜக வென்றது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் களம் கண்டார். அங்கு 5.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார். எனினும் வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வதோதரா தொகுதியை ராஜினாமா செய்தார். இதுபோலவே பாஜக மூத்த தலைவர் அத்வானி காந்திநகர் தொகுதியில் 4.70 லட்சம் வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். 

 

2014- மக்களவை தேர்தல்

 

கட்சி

தொகுதிகள் (26)

வாக்கு சதவீதம்

பாஜக

26

59.1

காங்கிரஸ்

0

39.9

மற்ற கட்சிகள்

0

8

 

குஜராத்தை பொறுத்தவரையில் பாஜகவை விடவும், பிரதமர் மோடியின் செல்வாக்கு கோலோச்சும் மாநிலம். இருப்பினும் கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு குஜராத் அரசியல் ரீதியாக அதிகமாகவே மாறியுள்ளது. படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டமும், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும் பொருளாதார சரிவை சந்தித்த மாநிலமாக குஜராத் உள்ளது. மக்களவை தேர்தலில் இந்த சவாலை பாஜக சந்திக்கும் சூழல் உள்ளது. கடந்த முறை போன்று 59 சதவீத வாக்குகள் பெற்று அசைக்க முடியாத வெற்றி பெற்ற சூழ்நிலை தற்போது இல்லை.

 

2009- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (26)

வாக்கு சதவீதம்

பாஜக

15

46.52

காங்கிரஸ்

11

43.38

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x