Published : 07 Apr 2019 06:28 PM
Last Updated : 07 Apr 2019 06:28 PM
தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வலிமையாக உள்ள இந்த மாநிலத்தில் மாநில கட்சிகளான சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸூம் பலம் பொருந்திய கூட்டாளிகள். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி இதுவரை இல்லாத வகையில் பெரும் வெற்றி பெற்றது.
2014- மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா
கட்சி | தொகுதிகள் (48) | வாக்கு சதவீதம் (%) |
பாஜக கூட்டணி | ||
பாஜக | 24 | 27.3 |
சிவசேனா | 18 | 20.6 |
சுவாபிமாண் பக்ஷா | 1 | 2.3 |
காங்கிரஸ் கூட்டணி | ||
காங்கிரஸ் | 2 | 18.10 |
தேசியவாத காங்கிரஸ் | 4 | 16 |
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா நீண்டகால கூட்டாளி. கடந்த மக்களவை தேர்தல் வரை தொடர்ந்து வந்த இந்த கூட்டணி, அதன் பிறகு நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முறிந்தது. யாருக்கு அதிக தொகுதிகள் என்ற போட்டியில் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. எனினும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஆட்சியை அமைத்தன.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணியில் சிவசேனா நீடித்து வருகின்றன போதிலும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. பாஜக - சிவசேனா கூட்டணி இந்த தேர்தலில் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக சிவசேனா அறிவித்தபோதிலும் அதில் உறுதியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.
எனினும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே வலிமையான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அணியை எதிர்த்து பாஜக தனியாக களம் இறங்குமா என்ற கேள்வி இருந்து வருகிறது. மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் மாநில அரசின் தலை விதியையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வாய்ப்புண்டு.
கட்சி | தொகுதிகள் (48) | வாக்கு சதவீதம் (%) |
காங்கிரஸ் கூட்டணி | ||
காங்கிரஸ் | 17 | 19.61 |
தேசியவாத காங்கிரஸ் | 9 | 19.28 |
பாஜக கூட்டணி | ||
பாஜக | 9 | 18.17 |
சிவசேனா | 11 | 17 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT