Published : 09 Apr 2019 11:02 AM
Last Updated : 09 Apr 2019 11:02 AM
நாட்டின் மையப்பகுதியான மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாகவே பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக களம் காணும் கட்சிகள். இருகட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி உண்டு. கடந்த 15 ஆண்டுகளாகவே அங்கு பாஜக கோலோச்சி வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் போன்ற காங்கிரஸின் அசைக்க முடியாத தலைவர்கள் மட்டுமே தப்பி தவறி வெற்றி பெற முடிந்தது.
2014- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (29) | வாக்கு சதவீதம் |
பாஜக | 27 | 55 |
காங்கிரஸ் | 2 | 34.9 |
பகுஜன் சமாஜ் | 0 | 3.8 |
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. 15 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியை தழுவியுள்ளது. விவசாயிகள கடன் தள்ளுபடி தொடங்கி, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு என பல பிரச்சினைகளும் பாஜக தோல்விக்கு காரணமாக அமைந்தன. இந்த மக்களவை தேர்தலிலும் இருகட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றே கருதப்படுகிறது.
2009- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (29) | வாக்கு சதவீதம் |
பாஜக | 16 | 43.45 |
காங்கிரஸ் | 12 | 40.14 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT