Published : 09 Apr 2019 01:07 PM
Last Updated : 09 Apr 2019 01:07 PM
இந்தியாவில் சில பகுதிகளைப் பிடித்திருந்த போச்சுகீசியர்களும் மராட்டிய மன்னர்களும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்த காலம். அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அப்போதைய மராட்டிய அரசு தங்கள் ஆளுகைக்குட்பட்ட 72 கிராமங்களை போர்ச்சுகீசியர்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இதற்கான ஒப்பந்தம் 1799-ம் ஆண்டில் போடப்பட்டது.
அப்படிக் கொடுக்கப்பட்ட கிராமங்களின் கூட்டம்தான் இன்றைய இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர்ஹவேலி.
# குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இந்த யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களிடம் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் வெளியேறாமல் போர்ச்சுக்கீசியர்கள் அடம் பிடித்தார்கள்.
1954-ம் ஆண்டில், இப்பகுதி மக்களே புரட்சி செய்து அவர்களை வெளியேற்றினார்கள். இதையடுத்து 1961-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தன இப்பகுதிகள்.
2014- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (1) | வாக்கு சதவீதம் |
பாஜக | 1 | 48.9 |
காங்கிரஸ் | 0 | 45.1 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT