Last Updated : 08 Apr, 2019 10:49 AM

 

Published : 08 Apr 2019 10:49 AM
Last Updated : 08 Apr 2019 10:49 AM

தேர்தல் களம் 2019; ஜம்மு - காஷ்மீர்: தீவிரம் காட்டும் தேசிய மாநாட்டுக்கட்சி

பாகிஸ்தானை மையப்படுத்தி அரசியல், சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் இம்மாநிலத்தில் தேர்தல் களம் எப்போதுமே மத ரீதியாகவே நகர்ந்து வருகிறது. காங்கிரஸுக்கு எதிராக ஷேக் அப்துல்லா உருவாக்கிய தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று தலைமுறையை கடந்து விட்டது. பரூக் அப்துல்லாவை கடந்து உமர் அப்துல்லாவின் தலைமையில் அக்கட்சி இயங்கி வருகிறது. தேசிய மாநாட்டுக்கட்சிக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்த மக்கள் ஜனநாயக கட்சிக்கும் வலிமையான வாக்கு வங்கி உண்டு. கடந்த மக்களவை தேர்தலில் அனைத்துக்கட்சிகளும் தனியாக களம் கண்டன.

 

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (06)

வாக்கு சதவீதம்

பாஜக

3

34.4

மக்கள் ஜனநாயக கட்சி

3

20.5

தேசிய மாநாடு   

0

11.1

காங்கிரஸ்

0

22.9

 

மக்களவைத் தேர்தலை தொடர்ந்து நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. ஆனால் தேர்தலுக்கு பிறகு எதிர்பாராத அதிர்ச்சி அரங்கேறியது. எதிரெதிர் வாக்கு வங்கியை கொண்ட பாஜகவும், மக்கள் ஜனநாய கட்சியும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தன. அதிக வாக்குகளை பெற்ற இவ்விரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அரசு அமைந்தது.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வரானார். சிறிது காலத்தில் மரணமடையவே அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். எனினும் இந்த கூட்டணி ஆட்சி இறுதியில் கசப்பிலேயே முடிந்தது. கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறியது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் சட்டப்பேரவை முடக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கப்பட வாய்ப்புள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் ஏற்கெனவே கரம் கோர்த்து செயல்படுகின்றன. இந்த கட்சிகள் மக்கள் ஜனநாயக கட்சியுடனும் தொகுதி உடன்பாடு கொள்ள வாய்ப்பு உள்ளது.

 

2009- மக்களவை தேர்தல்,
 

கட்சி

தொகுதிகள் (6)

வாக்கு சதவீதம்

கதேசிய மாநாடு

3

19.11

காங்கிரஸ்

2

24.67

சுயேச்சை

1

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x