Published : 09 Apr 2019 10:55 AM
Last Updated : 09 Apr 2019 10:55 AM
மலைவாழ் மக்கள் அதிகம் கொண்ட ஜார்கண்ட் மாநிலம், பிஹாரில் இருந்து பிரிந்த மாநிலம். அதிகவளங்கள் கொண்ட இந்த பகுதி வளர்ச்சியாமல் இருந்ததால் பிஹாரில் இருந்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மலைவாழ் மக்கள் வளர்ச்சி பெற அமைக்கப்பட்ட தனி மாநிலம் ஜார்கண்ட்.
மலைவாழ் மக்களுக்காக ஜார்கண்ட் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உருவான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பல குழுக்களாக பிரிந்து விட்டன. சிபுசோரன் தலைமையிலான கட்சி வலிமையாக இருந்தது. வேறுசில ஜார்கண்ட் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தன. ஆனால் ஜார்கண்ட் கட்சிகளை தாண்டி வலிமையான வாக்கு வங்கியுடன் பாஜக உருவெடுத்தது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தேர்தலை சந்தித்தது. கடந்த மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது.
2014- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (14) | வாக்கு சதவீதம் |
பாஜக | 12 | 40.1 |
காங். கூட்டணி |
|
|
காங்கிரஸ் | 0 | 13.3 |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா | 2 | 9.3 |
ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா | 0 | 12.1 |
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸூம் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து போட்டியிட உள்ளன. அதேசமயம் வலுவான நிலையில் உள்ள பாஜக தனித்து போட்டியிடுகிறது. பிற கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சூழல் உள்ளது.
2009- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (14) | வாக்கு சதவீதம் |
பாஜக | 8 | 27.53 |
காங் கூட்டணி | ||
காங்கிரஸ் | 1 | 15.02 |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா | 2 | 11.7 |
ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா | 1 | 12.1 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT