Last Updated : 09 Apr, 2019 10:50 AM

 

Published : 09 Apr 2019 10:50 AM
Last Updated : 09 Apr 2019 10:50 AM

தேர்தல் களம் 2019: பிஹார்: லாலு கட்சியின் செல்வாக்கு தொடருமா?

உத்தர பிரதேசதத்தை போலவே அரசியலில் ஜாதிய கணக்குகள் அதிகம் எதிரொலிக்கும் முக்கிய மாநிலம் பிஹார். பாஜகவுடன் நீண்டகாலம் தோழமையுடன் பழகி வந்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மக்களவை தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்க மறுத்த நிதிஷ் தனியாக களம் கண்டார். நிதிஷ் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வானுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாஜக.

பாஜகவின் நீண்டகால அரசியல் எதிரியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எனினும் பிஹார் அரசியல் ஜாம்பவான்களான நிதிஷ் குமாரையும், லாலு பிரசாத்தையும் பின்னுக்கு தள்ளி பெரும் வெற்றி பெற்றது பாஜக கூட்டணி.

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (40)

வாக்கு சதவீதம்

பாஜக

22

29.4

லோக் ஜனசக்தி

6

6.4

ராஷ்ட்ரீய லோக் சமதா

3

3

காங் கூட்டணி

ராஷ்ட்ரீய ஜனதாதளம்

4

20.1

காங்கிரஸ்

2

8.4

தேசியவாத காங்

1

1.2

ஐக்கிய ஜனதாதளம்

2

15.8

 

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியால் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார், நீண்டகால அரசியல் எதிரியான லாலு பிரசாத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலில் கரம் கோத்தார். பாஜகவுக்கு எதிராக பிஹாரில் மெகா கூட்டணி உருவானது. இந்த தேர்தலில் பாஜகவை, மெகா கூட்டணி வீழ்த்தியது. எனினும் அடுத்த சில மாதங்களில் லாலு மற்றும் நிதிஷ் கட்சியினருக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இருகட்சிகளும் அமைத்த கூட்டணி அரசு கவிழ்ந்தது. கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார். கடந்த முறை கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் இந்த கூட்டணியில் தொடர்கிறார். அதேசமயம் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி லாலு கூட்டணியில் இணைந்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. எனவே மீண்டும் இருமுனை போட்டியை சந்திக்கிறது பிஹார் அரசியல் களம்.

 

2009- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (40)

வாக்கு சதவீதம்

தே.ஜ கூட்டணி

 

 

ஐக்கிய ஜனதாதளம்

20

24.04

பாஜக

12

13.93

ராஷ்ட்ரீய ஜனதாதளம்

4

19.3

காங்கிரஸ்

2

10.26

சுயேச்சை

2

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x