Last Updated : 13 Mar, 2019 11:04 AM

 

Published : 13 Mar 2019 11:04 AM
Last Updated : 13 Mar 2019 11:04 AM

மண்டியாவில் நிகில் குமாரசாமி போட்டியிட காங்கிரஸார் எதிர்ப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் -மஜத கூட்டணி சார்பில் மண்டியாதொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமானசுமலதாவும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் வசமிருந்த மண்டியா தொகுதியை மஜதவுக்கு விட்டுக்கொடுத்ததை எதிர்த்து, காங்கிரஸ் நிர்வாகிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் இங்குபோட்டியிட்ட எஸ்.எம்.கிருஷ்ணா,அம்பரீஷ், ரம்யா உள்ளிட்டோர் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர். எனவே இந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் மஜதவுக்கு ஒதுக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மண்டியாவில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பொது இடங்களில் ''கோ பேக் நிகில்'' (திரும்பிப் போ நிகில்) என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதே போல ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் ‘கோ பேக் நிகில்' ஹேஷ்டேக் பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, மண்டியாவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளை சமாதானப்படுத்துமாறு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் மண்டியாவுக்கு சென்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிகில் குமாரசாமியின் வெற்றிக்காக பாடுபடுமாறும், பிரச்சாரத்துக்கு ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை பலர் ஏற்க மறுத்து, அரங்கை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x