Published : 10 Mar 2019 06:42 AM
Last Updated : 10 Mar 2019 06:42 AM
மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதி யில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் கட்சி சார்பில் வெளியிடப்படவில்லை.
எனினும், மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக் கப்பட்டதாக தகவல் வெளி யாகி உள்ளது. குறிப்பாக, வேட்பாளர்களைத் தேர்வு செய் வது, அவர்களின் வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு பாஜக வட்டாரத்தினர் கூறும்போது, “பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டி யிடுவார். இது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. மற் றொரு தொகுதியில் அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும்” என்றனர்.
கடந்த மக்களவைத் தேர் தலில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத் மாநிலம் வடோதரா ஆகிய 2 தொகுதி களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் வார ணாசி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அர் விந்த் கேஜ்ரிவாலை 3 லட் சத்துக்கும் மேற்பட்ட வாக்கு கள் வித்தியாசத்தில் தோற் கடித்தார். காங்கிரஸ் வேட் பாளர் அஜய் ராய் வெறும் 75 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். வார ணாசி தொகுதியை தக்கவைத் துக்கொண்ட மோடி, வடோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
ஜார்க்கண்டில் கூட்டணி
ஆட்சிமன்றக் குழு கூட்டத் துக்குப் பிறகு பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறும் போது, “ஜார்க்கண்ட் மாநிலத் தில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்புட னான கூட்டணி தொடரும். அங்கு மொத்தம் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் 13 தொகுதிகளில் போட்டியிடப்படும்” என்றார்.
இருப்பினும் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டி யிடுவது குறித்து அதிகாரப் பூர்வமாக அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT