Published : 21 Mar 2019 05:37 AM
Last Updated : 21 Mar 2019 05:37 AM
மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்திக்கு பாஜக, காங்கி ரஸ் கட்சியினர் வலியுறுத்தி வரு கின்றனர்.
நேற்று முன்தினம் முதல் வேட் பாளர்களை தேர்வு செய்ய பாஜக வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடும் தொகுதி உ.பி.யின் வாரணாசி என முடிவாகி உள்ளது. இதன் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், மற்றொரு தொகுதி யிலும் மோடி போட்டியிட வேண்டும் என பாஜகவில் குரல்கள் எழுந்துள் ளன. குஜராத் மற்றும் ஒடிசா மாநில பாஜகவினர் இதை வலியுறுத்தி வருவது தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர் தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. இதற்கு அம் மாநிலத்தில் காங்கிரஸுக்கு செல் வாக்கு கூடியதாகக் கருதப்பட்டது. மக்களவை தேர்தலிலும் இதன் தாக்கம் ஏற்படாமல் சமாளிக்க குஜராத்தில் மோடி போட்டியிடுவது அவசியம் எனக் கருதப்படுகிறது.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் மோடி வாரணாசியுடன் சேர்த்து குஜராத்தின் வடோதரா விலும் போட்டியிட்டிருந்தார். பிறகு வடோதரா தொகுதி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தி ருந்தார். இந்தமுறை மீண்டும் குஜராத்தின் ஒரு தொகுதி யில் மோடி போட்டியிட வலி யுறுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், மக்களவையுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடை பெறும் ஒடிசாவிலும் மோடி போட்டி யிட வலியுறுத்தப்படுகிறது. ஒடிசா வில் பாஜக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே மோடி யின் செல்வாக்கால் ஆட்சியை பிடிக்க உதவும் என்பது அம்மாநில பாஜகவினரின் கருத்தாக உள்ளது. இதற்காக, மோடிக்கு ஒடிசாவின் புரி தொகுதி பொருத்தமாக இருக்கும் எனவும், புனித நகரமான அங்கு அவர் வெல்வது எளிது என்றும் பரிந்துரைக்கப்பட்டு வரு கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மக்களவை தேர்தலில் உ.பி.யின் அமேதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இதே தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவார் என காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலில் அறிவித்துள்ளது. மேலும் ராகுலும் இரண்டாவதாக வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸார் வலியுறுத்துகின்றனர். இதற்காக ராகுலுக்கு தென் இந்தியாவின் ஒரு தொகுதி சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இவரது தாய் சோனியா காந்தியும், பாட்டியான இந்திரா காந்தியும் தென் இந்தியாவைச் சேர்ந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தனர். இந்திரா காந்தி கர்நாடகாவின் சிக்மகளூரிலும், சோனியா காந்தி பெல்லாரியிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
இதனால், தென் இந்தியாவில் காங்கிரஸின் பிடிப்பு அதிகமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. இதேவகையில், ராகுலும் தென் மாநிலங்களில் போட்டியிடுவதன் மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கா னாவில் காங்கிரஸ் உறுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரையும் ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டி யிடாததால் அதுதொடர்பாக யோசித்து வருகிறார். தென்பகுதி யில் மற்ற மூன்று மாநிலங்களில் தனக்கு உறுதியானக் கூட்டணி அமைந்திருப்பதாக காங்கிரஸ் நம்புவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT