Published : 21 Mar 2019 07:12 AM
Last Updated : 21 Mar 2019 07:12 AM
‘‘ஆட்சியில் இருக்கும் போது நாடாளுமன்றம், நீதித்துறை உட்பட அனைத்து அமைப்புகளையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி மீதுள்ள ஆசையால், இந்த நாடு மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு முன்னர் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன் னிட்டு பிரதமர் மோடி, தனது இணையதள ‘பிளாக்’கில் கூறி யிருப்பதாவது:
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. மக் கள் வாக்களிக்க செல்வதற்கு முன் னர் கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள். எப்படி ஒரு குடும்பத் தின் பதவி ஆசையால், இந்த நாடு எந்த அளவுக்குப் பெரிதாக பாதிக்கப்பட்டது என்பதை நினைத்துப் பாருங்கள். கடந்த கால ஆட்சியில் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், இப்போதும் அதையே செய்வார்கள்.
ஊடகங்களில் இருந்து நாடா ளுமன்றம் வரை, ராணுவ வீரர்கள் முதல் பேச்சு சுதந்திரம் வரை, அரசி யலமைப்பு சட்டம் முதல் நீதிமன் றங்கள் வரை, தேசிய அமைப்புகள் எல்லாவற்றையும் அவமானப் படுத்துவதுதான் காங்கிரஸ் வழி. குடும்ப அரசியல் ஆதிக்கம் இருந்த போதெல்லாம் தேசிய அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. நாட்டில் எல்லோரும் தவறானவர்கள். காங்கிரஸ் மட்டும்தான் சரியானது என்று நினைக்கிறார்கள்.
ஆனால், என் தலைமையிலான அரசு அவை எல்லாவற்றையும் மாற்றி அமைத்துள்ளது. எல்லாவற் றுக்கும் மேலானது தேசிய அமைப்புகள்தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம்.
நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கை களை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப ஆட்சி நிலவிய காலத் தைவிட, குடும்ப அரசியல் இல்லாத ஆட்சி இருக்கும் போதெல்லாம் இரு அவை களிலும் அதிக அலுவல் கள் நடந்துள்ளதை கண் கூடாகப் பார்க்க முடியும்.
காங்கிரஸ் ஆட்சியில் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கும் அரசியல் சட்டத் திருத்தம் முதன் முதலாகக் கொண்டு வரப்பட்டது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் எதை வெளியிட்டாலும் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஐமுகூ அமைச்சர் ஒருவரின் மகனுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து வெளியிட்டதால், அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற கொடுமைகளை எல்லாம் இந்த நாடு பார்த்துக் கொண்டுதான் இருந்தது.
குடும்ப அரசியலை பாதுகாப் பதற்காகவே காங்கிரஸ் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. மேலும், 356-வது சட்டப்பிரிவை காங்கிரஸ் மட்டும் 100 முறைக்கு மேல் பயன்படுத்தி மாநில ஆட்சி களைக் கலைத்துள்ளது. இதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மட்டும் 50 முறை இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி உள்ளார். ஒரு மாநில அரசு பதவியில் இருப்பது பிடிக்காவிட்டாலோ அல்லது தலைவரைப் பிடிக்காவிட்டாலோ உடனடியாக மாநில அரசை காங்கிரஸ் கலைத்துவிடும்.
நீதித்துறை தங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் இந்திரா காந்தி. தீர்ப்பு எதிராக இருந்தால் அதை நிராகரிப்பது. நீதிபதியை இழிவுப்படுத்துவது, அதன்பிறகு நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது. (அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அதை குறிப்பிட்டு மோடி இந்தக் கருத்தை கூறியுள்ளார்.)
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய திட்டக் கமிஷனை, ‘ஜோக்கர்கள் நிறைந்த அமைப்பு’ என்று அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கிண்டலடித்தார். சிபிஐ என் பது ‘காங்கிரஸ் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ போலாகி விட்டது. இதுபோல் தேசத்தின் அமைப்புகள் எல்லாவற்றையும் அவர்கள் அவமானப்படுத்தினார் கள்.
கடந்த 1947-ம் ஆண்டு முதல் ஒவ் வொரு காங்கிரஸ் ஆட்சியிலும், பாதுகாப்புத் துறையில் நிறைய ஊழல்கள் நடந்தேறின. ஜீப் வாங்குவதில் தொடங்கி, ஆயுதங் கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலி காப்டர்கள் வாங்கியது என எல்லா வற்றிலும் ஊழல் நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் எல்லோரும் ஒரு குடும்பத்துடன் தொடர்புடையவர்கள்.
தீவிரவாதிகள் மீது நாம் தாக்குதல் நடத்தினால், வீரர்கள் மீது காங்கிரஸ் சந்தேகத்தை கிளப் புகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இல்லை. எந்தத் தலைவராவது காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக கனவு கண்டால், உடனடியாக அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக் களவை தேர்தலில் குடும்ப அரசி யலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் மக்கள் நேர்மை யாக வாக்களித்தனர். அதேபோல் இந்தத் தேர்தலிலும் வாக்களிப்ப தற்கு முன்னர் மக்கள் நன்கு யோசித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ‘பிளாக்’கில் மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT