Last Updated : 20 Mar, 2019 09:37 AM

 

Published : 20 Mar 2019 09:37 AM
Last Updated : 20 Mar 2019 09:37 AM

வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:நமது நாட்டில் உள்ள சிலமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்துதேவைப்படுகிறது. அந்த மாநிலங்களுக்கே உரிய இணைப்பு, நிலப்பரப்பு, உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகள், சிரமங்களுக்காக அந்த சிறப்பு அந்தஸ்து தேவைப்படுகிறது. அது அவசியமும் கூட.

காங்கிரஸ் கட்சியின் மனதில் அருணாச்சல பிரதேசத்துக்கு என தனி இடம் உள்ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அருணாச்சல் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.

குடியுரிமை (திருத்த) மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம். வடகிழக்கு மாநிலங்களை சீரழியச் செய்யும் இந்த மசோதாவை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

வடகிழக்கு மாநிலங்களின் மொழி, கலாசாரம், பழக்க வழக்கத்தின் மீது காங்கிரஸ் கட்சி தாக்குதல் தொடுத்ததில்லை. அந்தமாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலிலேயே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதே தேதியில் அருணாச்சல பிரதேச சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x