Published : 25 Mar 2019 07:19 AM
Last Updated : 25 Mar 2019 07:19 AM

மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்கிறது பாஜக- பிருந்தா காரத் ஆவேசம்

ஆந்திர பிரதேசத்தில் மக்களவைக் கும், சட்டப்பேரவைக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெறவுள் ளது. இதற்காக, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி யின் கீழ், நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு மட்டுமே விதைக் கப்பட்டது. நாட்டில் உள்ள ஜன நாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அரசமைப்புச் சட்டம் பல வழிகளில் மீறப்பட்டது.

முந்தைய தேர்தலின்போது, பாஜக அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் துன்புறுத்தப்பட்டனர். எனவே, இந்த முறை, பாஜகவுக்கு மக்கள் கட்டாயம் தக்க பாடம் புகட்டுவார்கள். நாட்டு மக்களை ஜாதி, மத ரீதியாக பிளவு படுத்தி அதன் மூலம் அரசியல் செய்யும் உத்தியை பாஜக கடைப் பிடிக்கிறது. அதேபோல், ஆந்திரா வுக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தருவதில் ஆளும் தெலுங்கு தேச மும், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் தோல்வியடைந்து விட்டன. இதன் மூலம், ஆந்திர மக்களை அவ்விரு கட்சிகளும் வஞ்சித்துவிட்டன.

ஆந்திர மக்களை பொறுத்த வரை, மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, மக்களின் அடிப்படை பிரச்சினைகள், தொழிலாளர் உரிமைகள், ஒடுக்கப்பட்ட சமூகத் தினரின் நலன்கள் ஆகியவற்றுக் காக போராடும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். டெல்லியில் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய, இடதுசாரி கட்சி வேட்பாளர்களை நாட்டு மக்கள் அதிக அளவில் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x