Last Updated : 10 Mar, 2019 07:55 AM

 

Published : 10 Mar 2019 07:55 AM
Last Updated : 10 Mar 2019 07:55 AM

காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாக்களித்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம்- கோவாவில் ராகுல் காந்தி வாக்குறுதி

‘‘காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாக்களித்தால், மீன்வளத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்குவோம்’’ என்று காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

கோவா மாநிலத்துக்குக் கடந்தவெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார். மீனவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து அவர் உரையாடினார். பனாஜியில் மீனவர்களை நேற்று சந்தித்து ராகுல் உரையாடினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘மத்தியில் ஆட்சி அமைக்க மக்களவைத் தேர்தலில் வாக்களித்தால், மீன்வளத் துறைக்கென தனிஅமைச்சகத்தை உருவாக்குவோம்’’ என்று உறுதி அளித்தார்.

இதுகுறித்து கோவா மீனவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘மீன்வளத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கும் திட்டத்தை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்’’ என்றனர்.

தற்போது, வேளாண் துறை அமைச்சகத்தின் கீழ் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை ஆகிய 3 துறைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர கடலோர பிராந்தியத்துக்கென மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விதிமுறைகளை அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

கோவாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2009-ம் ஆண்டு கோவாவில் நடந்த பேரணியில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உறுதி அளித்தார். அந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று ராகுலிடம் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x