Published : 28 Mar 2019 08:09 AM
Last Updated : 28 Mar 2019 08:09 AM
‘மெயின் பி சவுக்கிதார் ஹூன்’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பாஜக சார்பில் வீடியோ வெளியானது. தேர்தல் விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்று மார்ச் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை மீறி, மெயின் பி சவுக்கிதார் ஹூன் விளம்பரத்தில் ராணுவ வீரர்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதை பாஜக தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினர் நீரஜ் சமூக வலைதளங்களில் ‘ஷேர்’ செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து 3 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி பாஜக தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினர் நீரஜுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT