Published : 21 Mar 2019 05:40 AM
Last Updated : 21 Mar 2019 05:40 AM

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியால் மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகள் பிரியும்: காங்கிரஸ் - என்சிபி கூட்டணிக்கு பாதிப்பு

மகாராஷ்டிராவில் சமாஜ்வாதியும் - பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து 48 தொகுதிகளிலும் களம் இறங்குவதால், முஸ்லிம் வாக்குகள் பிரிந்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந் நிலையில், உ.பி.யைப் போலவே மகாராஷ்டிராவில் அகிலேஷ் தலை மையிலான சமாஜ்வாதி - மாயா வதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 48 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. மேலும், வேட் பாளர்கள் விரைவில் அறிவிக்கப் படுவார்கள் என்று கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம் ஐஎம் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அஹாதி (விபிஏ) தலித் அமைப்புடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ் லிம்களின் வாக்குகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸின் முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் மற்றும் மற்ற தலைவர்கள் கூறும்போது, ‘‘சமாஜ்வாதியும் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பெரும்பாலான முஸ்லிம் வாக்குளை பிரித்தால், அது பாஜக. வுக்கு சாதகமாவே முடியும்’’ என்கின்றனர்.

இதுகுறித்து சமாஜ்வாதி மாநில தலைவரும் எம்எல்ஏ.வுமான அபு ஆசிம் ஆஸ்மி கூறும்போது, ‘‘பாஜக, காங்கிரஸ் இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள். மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க நான் முயற்சித்தேன். ஆனால், காங்கிரஸ் கதவை மூடிவிட்டது. சமாஜ்வாதிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதனால் நீண்டகால திட்டத்தின்படி சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உருவானது’’ என்கிறார்.

ஆனால், ‘‘மத்தியிலும் மாநி லத்திலும் உள்ள பாஜக அரசு முஸ் லிம்களுக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸுக்கு தான் கிடைக்கும். ஏனெனில், ஏஐஎம் ஐஎம், எஸ்பி, பிஎஸ்பி ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்தால், அது பாஜக கூட்டணிக்கு சாதகமாகத் தான் இருக்கும் என்பதை முஸ்லிம் கள், முஸ்லிம் அல்லாதோர் அறிந்து வைத்துள்ளனர். எனவே, அந்த 3 கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள். காங்கிரஸுக்குதான் வாக்களிப்பார்கள்’’ என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x