Published : 08 Mar 2019 08:11 AM
Last Updated : 08 Mar 2019 08:11 AM
முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா வரும் மக்களவைத் தேர்தலில் மண்டியா தொகுதியில் தனது பேரன் நிகில் குமாரசாமி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து முதல்வர் குமாரசாமி, அவரது மனைவியும் எம்எல்ஏவுமான அனிதா, நிகில் ஆகியோர் நேற்று மண்டியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது மண்டியாவை சேர்ந்த மஜத நிர்வாகிகளை குமாரசாமி சந்தித்து, தனது மகனின் வெற்றிக்கு களப் பணியாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே தேவகவுடா தனது பேரன் நிகில் வெற்றி பெற வேண்டி ஸ்ரீங்கேரியில் நேற்று சிறப்பு பூஜை நடத்தினார். முன்னதாக தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயில், மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில் ஆகியவற்றிலும் அவரது வெற்றிக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து மண்டியாவில் பிரச்சாரம் செய்
வதற்கு ஏதுவாக அங்கு குடியேறப் போகும் வீட்டிலும் யாகம் நடத்த குமாரசாமியின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே குமாரசாமி மண்டியாவில் உள்ள மஜதவின் முக்கிய நிர்வாகிகளை வருகிற ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவுக்கு வரவழைத்து ஆடு, கோழி, மீன், நண்டு ஆகியவற்றுடன் கறி விருந்து பரிமாற திட்டமிட்டுள்ளார்.
இதேபோல மண்டியா தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆதரவாளர்களுக்கு கறி விருந்து நடத்த அவர் முடிவெடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT