Published : 29 Mar 2019 05:46 AM
Last Updated : 29 Mar 2019 05:46 AM
கிழக்கு உத்தரபிரதேச காங்கி ரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட் டுள்ள பிரியங்கா காந்தி தனது தாய் சோனியா காந்தியின் ரேபரேலி, மற்றும் சகோதரர் ராகுல் காந்தி யின் அமேதி தொகுதி ஆகிய வற்றில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டார்.
அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைப் பார்த்து பிரியங்கா காந்தி பேசுகையில், ‘‘மக்களவைத் தேர்தல் மட்டு மல்ல, உ.பி.யில் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேர வைத் தேர்தலுக்கும் தயாராக உள்ளீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதை கேட்டவுடன், ‘‘மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெறு வோம். 2022 தேர்தலுக்கு கடின மாகத் தயாராகிக் கொண்டிருக் கிறோம்’’ என்று தொண்டர்கள் உற்சாகமாக பதில் அளித்தனர்.
இதுகுறித்து அரசியல் நிபுணர் கள் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு பிரியங் காவை அழைத்து வந்தனர். அத னால், அவருக்குப் போதிய நேரம் இல்லை. ஆனால், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலையும் மனதில் வைத்தே அவரை களம் இறக்கி உள்ளனர்’’ என்றனர்.
உ.பி.யில் காங்கிரஸ் செல்வாக் குடன் இருந்தது. கடந்த 1989-ம் ஆண்டு கடைசியாக காங்கிரஸ் சார்பில் என்.டி.திவாரி முதல்வராக இருந்தார். அதன்பிறகு 30 ஆண்டு களாக உ.பி.யில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT