Published : 25 Mar 2019 06:44 PM
Last Updated : 25 Mar 2019 06:44 PM
வரும் மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியைச் சந்திக்கும் என்பதை உணர்த்தும்விதமாக, 'பை பை பாபு' என்று காட்டும் புதுமையான பிரச்சார டிஜிட்டல் கடிகாரம் ஒன்றை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கியுள்ளனர்.
இக்கடிகாரம் இன்று முதல் பிரச்சாரத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ள நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் அனைவரும் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜசேகர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ''ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ராமராஜ்யம் வரப்போவதை சுட்டிக்காட்டும்விதமாக இந்த டிஜிட்டல் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கடிகாரம் சந்திரபாபு நாயுடுவுக்கு 'பை பை' சொல்வதற்காக நிறுவப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன், கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெண்டுலா தொகுதியில் நிற்கிறார். அவர் தனது வேட்புமனுவை வெள்ளியன்று தாக்கல் செய்தார்'' என்று தெரிவித்தார்.
ஜெகன் மோகன், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய். எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் ஆந்திர சட்டப்பேரவையின் தற்போதையே எதிர்க்கட்சித் தலைவருமாவார்.
ஆந்திராவில் வரும் ஏப்ரல் 11 அன்று 173 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலோடு ஒரே நேரத்தில் மக்களவைக்கான பொதுத் தேர்தலும் நடைபெறுகிறது. இவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT