Published : 26 Mar 2019 06:37 AM
Last Updated : 26 Mar 2019 06:37 AM
ட்விட்டர் சமூக வலைதளத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று கூறியிருப்பதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏழை மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. முதலாளிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் சாதகமான அரசாக நடந்து வருகிறது.
உத்தரபிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைத் தீர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகை உள்ளது. பாஜக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கிற அரசாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா பிரச்சாரத்தில் பேசும்போது இதே பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் கூறும்போது, “நாட்டின் காவலாளிகள் (சவுகிதார்) என்று கூறிக் கொள்வோர் பணக்காரர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள். ஏழைகளைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT