Published : 28 Mar 2019 07:53 AM
Last Updated : 28 Mar 2019 07:53 AM
பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில், மக்களவையின் சபாநாயகரான சுமித்ரா மகா ஜனுக் கும் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போட்டியிட மறுவாய்ப்பு கிடைக் காது எனத் தெரியவந்துள்ளது
75 வயது தாண்டிய கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச் சரவையில் வாய்ப்பளிக்காத பாஜக இந்தமுறை, தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடிவு செய்திருந்தது.
பிப்ரவரியில் பாகிஸ் தான் தீவிரவவாத முகாம் மீதான தாக்குதலுக்கு பின் தற்போது கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு கூடி இருப்பதாக பாஜக நம்புகிறது. இதனால், மூத்த தலைவர்கள் மீதான தனது முடிவை வேட்பாளர் தேர்வில் மாற்றிக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, முன்னாள் துணைப் பிரதமரான எல்.கே.அத்வானிக்கு (91) பதிலாக குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷா போட்டியிடுகிறார். அதேபோல், கான்பூரின் எம்பி.யான முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிக்கு (85) பதிலாக உ.பி. அமைச்சரான சத்யதேவ் பச்சோரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இதன் மீது அறிக்கை வெளியிட்ட ஜோஷி, தன்னை போட்டியிட வேண்டாம் என பாஜக நிர்வாகிகள் வற்புறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இவரது நிலையே தனக்கும் ஏற்படும் என புரிந்துகொண்ட மத்திய அமைச்சரான கல்ராஜ் மிஸ்ரா(77), இந்தமுறை தாம் போட்டியிடப் போவதில்லை என முன்கூட்டியே அறிவித்து விட்டார்.
இந்தவரிசையில், மக்களவை யின் சபாநாயகரான சுமித்ரா மகாஜனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் மத்திய பிரதேச மாநில பாஜகவினர் எடுத்துக்கூறி போட்டியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என அன்புடன் அழைக்கப்படுபவருக்கு வரும் ஏப்ரல் 12-ல் 76 வயது நிறைவடைய உள்ளது. எனினும் அவரது உண்மையான வயது 78 எனக் கூறப்படுகிறது. கடந்த 1989 முதல் பாஜகவின் கோட்டையாக இருக்கும் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் எட்டாவது முறை எம்பி.யாக சுமித்ரா உள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய பிரதேச பாஜக வட்டாரம் கூறும்போது, ‘‘பாஜக வேட் பாளராக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால் தவிர இந்தூரில் இருந்து எங்கள் தாய் விலக மாட்டார் என ஆட்சிமன்றக் குழுவினருக்கு தகவல் அளித்தும் பலனில்லை. இத னால், அவருக்கு ஆட்சி அமைந்த பின் ஒரு முக்கியப் பதவியை எதிர் பார்க்கிறோம்’’ எனத் தெரிவித்தனர்.
இந்தூரை எப்படியும் இந்தமுறை தன்வசப்படுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதற்காக மத்திய பிரதேசத்தின் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரும் உ.பி. மேற்குப் பகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை அங்கு போட்டியிட வைக்க விரும்புகிறது. ஏற்கெனவே போட்டியிட்டு தோற்ற குஜராத் தொழிலதிபரான பங்கஜ் சங்கவி பெயரையும் காங்கிரஸ் பரிசீலிக்கிறது. ஆனால், அங்கு பாஜக நிறுத்த உள்ள அக்கட்சியின் முக்கிய தலைவரான கைலாஷ் விஜய்வர்கியாவிற்கு தான் வெற்றி என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ல் தேர்தல் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT