Published : 15 Mar 2019 09:15 AM
Last Updated : 15 Mar 2019 09:15 AM

அரசியலுக்கும் முக்கிய இடமாக விளங்கும் திருப்பதி- ஏழுமலையானை வணங்கி பிரச்சாரம் தொடங்கும் தலைவர்கள்

ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் அரசியல் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் திருமலையில் சுவாமி தரிசனம் செய்த பின் திருப்பதியில் பிரச்சாரம் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் பாதயாத்திரை தொடங்குவது அல்லது முக்கிய அறிவிப்பை வெளியிடுவது என்றால் அவர்களின் தேர்வு திருப்பதியாக உள்ளது. பல கட்சிகள் திருப்பதியில் உதயமாகியுள்ளன.

மறைந்த என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சியை தொடங்குவதற்கு முன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னரே கட்சி குறித்த அறிவிப்பை திருப்பதியில் வெளியிட்டார். மேலும் அவர் திருப்பதி தொகுதியில் இருந்தே அவர் முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். முக்கிய முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, அதை அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதே வழியை தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பின்பற்றி வருகிறார். ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரச்சாரத்தை திருப்பதியில் தொடங்கும் அவர் இம்முறை நாளை பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலம் முழுவதும் மேற்கொண்ட தனது பாதயாத்திரையை திருப்பதியில்தான் முடித்தார். பிறகு அவர் திருமலைக்கு நடந்து சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணும் தனது பிரஜா போராட்ட யாத்திரையை திருப்பதியில் தொடங்கினார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் திருப்பதி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெறும் 1.50 நிமிடத்தில் திருமலைக்கு நடந்து சென்று சுவாமியை வழிப்பட்டார்.

ஏழுமலையானை வணங்கிவிட்டு தொடங்கும் எந்த செயலும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை இதற்கு காரணம்.

திருப்பதி சட்டப்பேரவை தொகுதி மற்றும் மக்களவை தொகுதி மீதும் இதுபோன்ற நம்பிக்கை உள்ளது. மறைந்த என்.டி.ராமாராவ் மட்டுமின்றி சிரஞ்சீவியும் இங்கு போட்டியிட்டு அரசியல் பிரவேசம் செய்தார்.

பெரிய அளவில் கட்சி மாநாடுகள், போராட்டங்கள் நடத்துவதற்கும் அரசியல் தலைவர்களின் தேர்வாக திருப்பதி உள்ளது. இதற்கு திருப்பதியில் மைதானங்கள் பல இருப்பதும் பஸ், ரயில் போக்குவரத்து வசதி அதிகம் இருப்பதும் காரணமாக உள்ளது. மேலும் ரேணிகுண்டா விமான நிலையம் திருப்பதியிலிருந்து வெறும் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து தினமும் 32 விமான சேவை அளிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக ஏழுமலையானின் திரு வருள் இருப்பதால் ஆன்மீகவாதி கள் மட்டுமின்றி அரசியல்வாதி களுக்கும் முக்கிய இடமாக திருப்பதி திகழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x