Published : 25 Mar 2019 05:39 AM
Last Updated : 25 Mar 2019 05:39 AM
இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதிகள் உள்ள உத்தரபிரதேச மாநிலத் தின் மீதுதான் அனைவரின் பார்வையும் உள்ளது. பிரதமர் மோடி, ராகுல் உட்பட விவிஐபி.க்கள் பல தொகுதிகளில் போட்டியிடு வதால் இந்த மாநிலம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே இந்த மாநிலத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணிதான் மத்தியில் ஆட்சியை அமைக்க பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, இந்த மாநிலத்தின் மீது அனை வருடைய பார்வையும் உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி வாரணாசியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவர் தவிர முக்கிய பிரமுகர்கள் பலர் உ.பி.யில் போட்டியிடுவதால் அரசியல் நிபுணர் கள் ஆர்வமுடன் இந்த மாநிலத்தைக் கவனித்து வருகின்றனர் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜே.பி.சுக்லா.
அடுத்த பிரதமரை உ.பி. தருமா, இல்லையா என்ற கேள்விக்கு என்ன விடை கிடைக்க போகிறது என்பதுதான் எல்லோருடைய எதிர்ப் பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் உ.பி.யில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயல்பாடு களையும் அரசியல் நிபுணர்கள் மட்டுமன்றி மக்களும் ஆர்வமுடன் கவனிக்கின்றனர்.
அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் இறங்கி உள்ளார். இவர் அடிக்கடி அமேதிக்குச் சென்று மக்களை சந்தித்து வந்துள்ளார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்துள்ளார். எனவே, இந்த முறை ராகுல் காந்தி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்கின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வருகிறார்.
ரேபரேலி தொகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டி யிட்டு வருகிறார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கன்னோஜ் தொகுதி எம்.பி.யாக உள்ளார். ஆசம்கர் தொகுதியில் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் எம்.பி.யாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியும் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவர்களில் டிம்பிள் மற்றும் தர்மேந்திர யாதவ் ஆகியோர் அவரவர் தொகுதியில் மீண் டும் போட்டியிடுகின்றனர். ஆனால், முலாயம் சிங் இந்த முறை ஆசம்கர் தொகுதிக்குப் பதில் மைன்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
தவிர பாஜக.வின் கோட்டையாகக் கருதப்படும் லக்னோவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியி டுகிறார். பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் மதுரா தொகுதி, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கின் காஸியாபாத் தொகுதி ஆகியவற்றில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதும் பலருடைய கேள்வியாக உள்ளது.
பாஜக.வில் உள்ள வருண் காந்தி, சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இந்த முறை அவர் பிலிபித் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப் படுகிறது. இந்திரா காந்தியின் இன்னொரு மருமகள் மேனகா காந்தி பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. யானவர். மத்திய அமைச்சராகவும் இருக்கிறார். இந்தத் தேர்தலில் தாயின் தொகுதி யில் மகன் வருண் காந்தி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், உ.பி.யில் காங்கிரஸை சேர்க்காமல் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட் டணி வைத்துள்ளன. எனவே, இந்தத் தேர்தல் இரு கட்சிகளுக்கும் ‘அமில சோதனை’யாக இருக்கும் என்கின்றனர்.
அதேபோல் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்த கோரக்பூர், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா எம்.பி.யாக இருந்த புல்பூர் தொகுதி யும் முக்கியத்துவம் பெற்றுள் ளன. இந்தத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளையும் எந்தக் கட்சி கைப்பற்றும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், நடிகரும் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜ் பப்பர் போட்டியிடும் பதேபூர் சிக்ரி தொகுதியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்பிரியங்கா காந்தியின் வரவால், உ.பி.யில் அந்தக் கட்சிக்கு எந்தளவுக்குப் பலன் கிடைக்க போகிறது என்பதும் இந்தத் தேர்தலில் தெரிந்து விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT