Published : 28 Mar 2019 08:19 AM
Last Updated : 28 Mar 2019 08:19 AM

வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதால் மோடிக்கு பயம்: ராகுல் காந்தி பேச்சு

வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதால் பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

டெல்லியிலுள்ள இந்திரா காந்தி உள்ளரங்க மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 வழங்கும் குறைந்தபட்ட வருமான திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளோம்.

வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதால் பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்க முடியும் என்பதை பிரதமர் உணர்ந்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா ரூ.15 லட்சம் தருவதாக 2014 தேர்தலின்போது மோடி பொய் பேசினார். ஆனால் எங்களால் ரூ.15 லட்சம் தர முடியாது. எங்களால் பொய் சொல்லவும் முடியாது. ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்தை எங்களால் அளிக்க முடியும். ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.3.60 லட்சம் கோடி பணம் வரவு வைக்கப்படும்.

எங்களால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்வோம்.

இந்தியாவிலுள்ள எந்தவொரு பிரிவைச் சேர்ந்தவரும் வியாபாரம் செய்ய முதல் 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை என்ற நிலையைக் கொண்டு வருவோம். இந்தியாவில் உருவாக்குவோம் என் பதை நாங்கள் விரும்புகிறோம் ஆனால் அம்பானியால் உருவாக்குவதை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x